நெய் சோறு(ghee rice recipe in tamil)

Vinothini Rajesh
Vinothini Rajesh @vino90

#SS

நெய் சோறு(ghee rice recipe in tamil)

#SS

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
ஐந்து பேர்
  1. மூன்று டேபிள் ஸ்பூன்என்னை
  2. 3 டேபிள்ஸ்பூன்நெய்
  3. இரண்டுபெரிய வெங்காயம்
  4. ஆறுபச்சை மிளகாய்
  5. சிறிதளவுகொத்தமல்லி
  6. சிறிதளவுபுதினா
  7. ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  8. இரண்டு டேபிள்ஸ்பூன்உப்பு
  9. 2 கிளாஸ்பிரியாணி அரிசி
  10. 4 கிளாஸ்தண்ணீர்
  11. இரண்டு துண்டுபட்டை
  12. 4கிராம்பு
  13. 2ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    இரண்டு கிளாஸ் பிரியாணி அரிசியை தண்ணீர் சேர்த்து ஒரு முறை அலசி தண்ணீரை கீழ விட்டு விடவும் மீண்டும் தண்ணீர் வரிசையில் பிடித்து ஊறவைத்து விடவும்

  2. 2

    இப்பொழுது தாளிப்பதற்கு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து என்னை மட்டும் சிறிது அளவு நெய் சேர்த்து சூடான பிறகு பட்டை கிராம்பு லவங்கம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்

  3. 3

    பொது நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளலாம்

  4. 4

    பொது அதனுடன் பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  5. 5

    நன்றாக வதங்கிய பிறகு இரண்டு கிளாஸ் அரிசிக்கு நான்கு கிளாஸ் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்து தட்டு போட்டு மூடி விடவும்

  6. 6

    கொதிவரும் வரை காத்திருக்கவும்

  7. 7

    கொதி வந்த பிறகு அரிசியை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து அரிசியை வேக வைக்கவும்

  8. 8

    அரிசி முக்கால்வாசி வெந்த பிறகு பாத்திரத்தை கீழே இறக்கி தோசை கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் பாத்திரத்தை வைத்து விடவும் இப்பொழுது தட்டு போட்டு காசை புல்லில் வைத்து விடவும் ஐந்து நிமிடம் தம் இருக்கு விடவும்

  9. 9

    கடைசியாக அதன் மேல் நெய்யை போட்டு லேசாக கிளறி விடவும். சுவையான நெய் சோறு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vinothini Rajesh
அன்று

Similar Recipes