வேர்க்கடலை சட்னி(groundnut chutney recipe in tamil)

#queen2 தேங்காய் சட்னி எம்புட்டு எளிமையோ அதே மாதிரிதான் இந்த சட்னியும்... எளிமையான சட்னிகள்ல ஒன்னு... அவசர சட்னி னு பேர் வச்சுக்கலாம்
வேர்க்கடலை சட்னி(groundnut chutney recipe in tamil)
#queen2 தேங்காய் சட்னி எம்புட்டு எளிமையோ அதே மாதிரிதான் இந்த சட்னியும்... எளிமையான சட்னிகள்ல ஒன்னு... அவசர சட்னி னு பேர் வச்சுக்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், பூண்டு, புளி, உப்பு,தேங்காய் எல்லாம் மிக்ஸில போட்டு ஒரு சுத்து சுத்த விட்டுட்டு அப்பறம் தண்ணி ஊத்தி மறுபடி அரைக்கணும்..
குறிப்பு..
இந்த செய்முறை வறுத்த வேர்க்கடலைக்கு தான் சரி வரும்... பச்சை வேர்க்கடலைல தான் செய்வேன்னு அடம்பிடிச்சா, நீங்க கடாய்ல கொஞ்சம் எண்ணெய் ஊத்தி., புளி, தேங்காய் தவிர மத்தவைங்கள போட்டு ஒரு வதக்கு வதக்கி ஆற வச்சு புளி, தேங்காய், உப்பு போட்டு அரைச்சுக்கோங்க... - 2
நல்ல மைய அரைச்ச பிறகு தாளிச்சு விடனும்... அம்புட்டு தான்., சுவையான, எளிமையான வேர்க்கடலை சட்னி தயார்..
ஆனந்தமாக சாப்பிடுங்க.
ஆரோக்கியமா இருங்க...
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்