எலுமிச்சை அடை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
எலுமிச்சை பழத்தை குறுக்காக 2 பக்கம் வெட்டி அதில் கல் உப்பை வைக்கவும். பின்பு உப்பு வைக்கப்பட்ட எலுமிச்சை பழங்களை செராமிக் ஜாடியில் வைத்து 1 எலுமிச்சை பழச்சாற்றை அதில் ஊற்றி மூடி போட்டு வெயில் படாத இடத்தில் 2 நாட்கள் வைக்கவும்.
- 2
பின்பு மூடியைத் திறந்து வெயிலில்,மேலே ஒரு வலைப் போட்டு வைக்க வேண்டும்.பொழுது சாயும் நேரம் உள்ளே எடுத்து வந்து வைத்து விடுங்கள். மறுநாள் காலை மறுபடியும் நன்றாக வெயிலில் படும் இடத்தில் மூடியைத் திறந்து வையுங்கள்.இப்படி 5 நாட்கள் தொடர்ந்து செய்தால் எலுமிச்சை பழங்கள் நன்றாக இத்து அடை ஊறுகாய் தயாராகி விடும்.இதை நாம் பழைய சோறு, மற்றும் நெய் சோறு ஆகிய வற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.எங்கள் ஊரில் நாங்கள் கத்துரீக்காய், மாங்காய் பருப்பு கறி செய்வோம் இதற்கு இந்த அடை ஊறுகாய் கட்டாயமாக சேர்ப்போம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16107524










கமெண்ட்