கனவா மீன் தொக்கு(squid gravy recipe in tamil)
Fathima @FathimaD
கனவா மீன் தொக்கு(squid gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கணவாய் மீனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடித்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு மண் சட்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெந்தயம் சேர்த்து தாளிக்கவும் இதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு தக்காளி மற்றும் மீன் தேவையான அளவு உப்பு மஞ்சள்தூள் சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் 10 நிமிடம் வேக விடவும்.
- 3
தக்காளி வதங்கி மசாலா சுருண்டு வந்த பின் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து கலந்து விட்டு மீண்டும் மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.
- 4
கணவாய் மீன் வெந்த பின்னர் இறுதியில் மிளகு தூள் மற்றும் கறிவேப்பிலை தூவி கலந்து அடுப்பை அணைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16161208



கமெண்ட்