சிக்கன் பட்டர் மசாலா(chicken butter masala recipe in tamil)
சிக்கன் பட்டர் மசாலா(chicken butter masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை நன்றாக தண்ணீரில் வேகவைத்து தோலுரித்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நீளமாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கி இதை ஆறவிட்டு கொள்ளவும். இந்த கலவை மற்றும் தக்காளியை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
முந்திரியை அரை மணி நேரம் சூடான தண்ணீரில் ஊற விடவும். பிறகு இதனை விழுதாக அரைக்கவும்.
- 3
கடாயில் 2 மேசைக்கரண்டி வெண்ணெய் சேர்த்து உருகியதும் சிக்கன் துண்டுகள் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அதிக தீயில் 5 நிமிடம் வதக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் சிக்கன் வேகும் வரை வேக விட்டுக் கொள்ளவும்.
- 4
வெந்தபின் வறுத்து கைகளால் நசுக்கிய கஸ்தூரி மேத்தி மேலும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கலந்து கொதிக்க விடவும். கடைசியாக ஃப்ரெஷ் கிரீம் மற்றும் வெண்ணெய் சேர்த்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்