பலாக்காய் கிரேவி(raw jackfruit gravy recipe in tamil)
3
சமையல் குறிப்புகள்
- 1
பலாக்காயை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி மோர் கலந்த தண்ணீரில் வைக்கவும். இதனை குக்கரில் சேர்த்து. 4 விசில் விட்டு வேக வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அதே குக்கரில் 4tblspn எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை தாளிக்கவும். பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
- 3
பொடியாக அறிந்த வெங்காயம் தக்காளியை சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கி விடவும்
- 4
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மீண்டும் வதக்கி மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 5
இப்போது ஒரு கப் அளவு தண்ணீர் விட்டு காய்க்கு தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் பச்சை வாடை போக கொதிக்க விடவும்
- 6
இப்போது தேங்காய் துருவலுடன் 1tspn சோம்பு சேர்த்து நன்கு நைசாக விழுதாக அரைக்கவும். இதனை காயுடன் சேர்க்கவும்
- 7
மீண்டும் குறைந்த தணலில் 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்து அடுப்பை அணைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes

























கமெண்ட்