சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி நீரில் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை மிளகாய் கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும் பின்பு காலிஃப்ளவர் சேர்த்து மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வறுக்கவும்
- 4
பின்பு இரண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு தூவி சிறிது எண்ணெய் சேர்த்து மீண்டும் வறுக்கவும்
- 5
சிறிது வறுத்தவுடன் மீண்டும் பொட்டுக்கடலை மாவை சேர்த்து சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு வறுத்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.. காலிஃப்ளவர் ஃப்ரை ரெடி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16216934










கமெண்ட்