ராகி மாவு குக்கீஸ்(ragi cookies recipe in tamil)

ராகி மாவு வைத்து நான்கு பொருட்கள் மட்டும் ஓவன் இல்லாமல் அடுப்பில் செய்யும் குக்கிஸ்.
ராகி மாவு குக்கீஸ்(ragi cookies recipe in tamil)
ராகி மாவு வைத்து நான்கு பொருட்கள் மட்டும் ஓவன் இல்லாமல் அடுப்பில் செய்யும் குக்கிஸ்.
சமையல் குறிப்புகள்
- 1
50 மில்லி நெய்யுடன் 100 கிராம் சர்க்கரை பவுடரை போட்டு நன்றாக நுரை வரும் அளவுக்கு கலக்கி அடித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
அந்த கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக ராகி மாவை சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
- 3
இதனுடன் கொஞ்சம் பால் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ஒரு தட்டில் டிஷ்யூ பேப்பர் விரித்து அதில் பரப்பி வைத்துக் கொள்ளவும்.
- 4
பின்னர் நமக்கு எந்த வடிவில் குக்கீஸ் வேண்டுமோ அந்த வடிவில் கட் பண்ணி வைத்துக் கொள்ளவும்.
- 5
இட்லி பானையை அடுப்பில் வைத்து அதனுள் உப்பு சேர்த்து ஒரு ஸ்டாண்ட் வைத்து தட்டில் நாம் கட் பண்ணி வைத்த பிஸ்கட்டை வைத்து மூடி வைத்து பதினைந்து நிமிடங்கள் சூடுபடுத்தவும்
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட்