மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)

மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மண் சட்டியை அடுப்பில் காய வைத்து அதில் எண்ணெய் சேர்க்கவும். சூடானதும் வெங்காயத்தை அரைத்து விழுதாக சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் ஆட்டு கறி மஞ்சள் தூள் மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டி சேர்த்து 10 நிமிடம் மசாலாவில் வதக்கவும்.
- 2
நன்றாக வதக்கிய பின் முக்கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சிறு தீயில் 40 நிமிடம் கறியை வேகவிடவும். அல்லது கறி வேகும் வரை வேக விடவும். இடையே கிளறி விட வேண்டும். கறி நன்றாக வெந்தபின் தண்ணீரை சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும். இதில் தேங்காய் துருவல் மற்றும் தக்காளியை அரைத்து விழுதாக சேர்த்து கூடவே கரம் மசாலாத்தூள் சேர்த்து ஒரு கொதி விடவும்.
- 3
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி புதினா இலைகளை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். இதனை பரோட்டா சப்பாத்தி நான் மற்றும் சாப்பாடு புலாவ் இவற்றோடு பரிமாறினால் சுவையாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes







கமெண்ட்