ஸஂடிர் பிரை வெஜ் வெர்மிசெல்லி(stir fry veg vermicelli recipe in tamil)

#birthday3 மிகவும் ருசியான சுலபமாக செய்யக்கூடிய காலை உணவுக்கு ஏற்ற வெஜ் வேர்மீசல்லி, கலர்ஃபுல்லாக இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.

சமையல் குறிப்புகள்
- 1
வெரஂசெல்லியை சிறு சிறு துண்டுகளாக உடைத்து ஒரு கடாயில் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் சிறிது சிவக்க வறுக்கவும்
- 2
நன்கு வறுபட்டதும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, மூழ்கும் அளவு தண்ணீர் சேர்க்கவும்
- 3
ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு இதனை 5 நிமிடங்கள் அடுப்பை அதிக தணலில் வைத்து நன்கு கொதிக்க விடவும். சேமியா முக்கால் பதம் வெந்ததும் இதனை வடிகட்டி அதன் மேல் குளிர் நீரை நன்கு ஊற்றவும் (இதனால் சேமியா மேலும் குழையாமல் நன்கு உதிரி உதிரியாக இருக்கும்)
- 4
ஒரு அடி கனமான கடாயில் கடலை எண்ணெய் விட்டு காய்ந்ததும் பெரிய வெங்காயம், கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கவும்
- 5
வதங்கியதும் இப்போது கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சிறிதளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் மீண்டும் ஒரு நிமிடம் நன்கு வதக்கி விடவும்.
- 6
இப்பொழுது சேமியாவை சேர்த்து நன்கு ஒரு சேர கிளறி அடுப்பை அணைக்கவும். மிகவும் ருசியான, குறைந்த நேரத்திலேயே செய்யக்கூடிய வெஜ் வெர்மிசெல்லி
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (2)