சாக்கோ டிரஃபுல் கேக்(choco truffle cake recipe in tamil)

சாக்கோ டிரஃபுல் கேக்(choco truffle cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் எண்ணெய் தயிர் வெனிலா எசன்ஸ் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து பீட்டர் கொண்டு சர்க்கரை கரையும் வரை அடிக்கவும்.
- 2
பின் இதில் ஒரு சல்லடை வைத்து அதில் மைதா மாவு சோள மாவு கொக்கோ பவுடர் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து சலிக்கவும். இதை நன்றாக கலந்து தேவைப்பட்டால் கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து கலந்து கிரீஸ் செய்த பேக்கிங்கில் ஊற்றவும்.
- 3
இதனை 10 நிமிடம் பிரிஹீட் செய்த ஓவன் இல் 180 டிகிரி 40 நிமிடங்கள் பேக் செய்யவும்
- 4
டிரவெல் சோஸ் தயாரிக்க ஃப்ரெஷ் க்ரீமை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொதி வரும் வரை காத்திருக்கவும். கொதித்த பின் அடுப்பை அணைத்து நறுக்கி வைத்துள்ள சாக்லேட் துண்டுகளை சேர்த்து கூடவே வெண்ணெய் சேர்த்து சாக்லேட் கரையும் வரை நன்றாக கலந்து இந்த கலவையை வடிகட்டியில் வடித்து ஒரு கிண்ணத்தில் மாற்றவும். இதனை 6 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
- 5
தயார் செய்த கேக்கை இரண்டு அல்லது மூன்று வட்டங்களாக வெட்டி தேவைப்படும் அளவிற்கு சர்க்கரை சிறப்பு ஊற்றவும். ஒவ்வொரு லேயருக்கு மேலும் சாஸ் ஊற்றவும். ஒவ்வொன்றையும் அடுக்கி வைத்து மீதமுள்ள சாஸை மேலே ஊற்றி ஸ்பிரிங்கில்ஸ் தூவி அலங்கரிக்கவும்.
- 6
அருமையான சாக்கோ ட்ரஃபில் கேக் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட்