KFC ஸ்டைல் சிக்கன் பாப்கார்ன்(kfc style chicken popcorn recipe in tamil)

KFC ஸ்டைல் சிக்கன் பாப்கார்ன்(kfc style chicken popcorn recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் தயிர், முட்டை, மிளகாய்த்தூள், மிளகு சீரகம் தூள், சிக்கன் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மிக்சியில் வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.இதனை வடிகட்டி முட்டை கலவையுடன் சேர்த்து கிளறவும். இதனுடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து 4-5 மணி நேரம்ஃப்ரிட்ஜில் ஊறவைக்கவும்
- 2
பாத்திரத்தில் மைதா மாவு, சோளா மாவு, உப்பு, மிளகாய்த்தூள், மல்லி தூள், மிளகு சீரகம் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
இப்போது ஊறிய சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மாவுடன் கலந்து தனியாக வைக்கவும். மாவுடன் கலந்த சிக்கன் துண்டுகளை மற்றொரு முறை அதே மாவுடன் இரண்டாம் கோட்டிங் செய்ய வேண்டும்.
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான கிரிஸ்பியான KFC style சிக்கன் பாப்கார்ன் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes







கமெண்ட்