முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்(murungaikeerai sambar recipe in tamil)

முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்(murungaikeerai sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கை இலையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.3 வகையான பருப்பை பௌலில் எடுக்கவும்.
- 2
முருங்கை இலையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.3 வகையான பருப்பை பௌலில் எடுக்கவும். பருப்பில், ம.தூள், உப்பு போட்டு, தண்ணீரில்,10 நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில் பருப்புகளை போட்டு,3/4 பாகம் வெந்ததும், கீரையுடன், சிறிது சர்க்கரை போட்டு மூடாமல், வேக விடவும்.
- 4
அடுப்பை சிம்மில் வைத்து, ப.மிளகாயை பெரிய துண்டாக நறுக்கி, அதனுடன், சாம்பார் பொடி, உப்பு போட்டு வேக விடவும். ஒன்று சேர வெந்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு, சாம்பாரை பௌலுக்கு மாற்றவும்.
- 5
கடாயில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, வெந்தயம்,மிளகாய் தாளிக்கவும். தக்காளியை, சிறு துண்டாக நறுக்கி போட்டு நன்கு வதக்கவும்.
- 6
வதக்கியதை சாம்பாரில் கொட்டி மேலே பெருங்காயத் தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை போடவும்.
- 7
பிறகு நன்கு கலக்கவும்.இப்போது, சுவையான, ஆரோக்கியமான, *முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes






கமெண்ட்