ரவை உருளைகிழங்கு உருண்டை(rava potato bonda recipe in tamil)

zaina zuha
zaina zuha @cook_36817778

ரவை உருளைகிழங்கு உருண்டை(rava potato bonda recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்களில்
4 நபர்கள்
  1. 2மசித்த உருளைக்கிழங்கு
  2. 1/2 கப் ரவை
  3. 1/4 கப் தண்ணீர்
  4. 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  5. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1/4கப் பிரெட்தூள்
  7. தேவையானஅளவு உப்பு
  8. எண்ணெய் பொரிக்க
  9. சிறிதுநறுக்கிய கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்களில்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ரவை, எண்ணெய், 1/4 கப் சுடு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்

  2. 2

    ஒரு பவுலில் உருளைக்கிழங்கு, ஊறவைத்த ரவை, மிளகாய்த்தூள்,உப்பு,பிரெட் தூள், நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும் (இவை கெட்டியாக இருக்கவேண்டும் தண்ணீர் போல் இருப்பதாக தோன்றினால் சிறிது சோள மாவு கலந்து ப்ரீசரில் 15 நிமிடம் வைக்கவும்)

  3. 3

    இப்போது கையில் சிறிது எண்ணெய் தேய்த்து கலந்து வைத்திருக்கும் கலவையை உருட்டிக் கொள்ளவும் இதேபோல் அனைத்தையும் தயார் செய்து கொள்ளவும்

  4. 4

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் தயாரித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து பொரித்து கொள்ளவும்.
    உருளைக்கிழங்கு ரவை உருண்டை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
zaina zuha
zaina zuha @cook_36817778
அன்று

Similar Recipes