தக்காளி கத்திரிக்காய் கடைசல்(tomato brinjal kadaisal recipe in tamil)

வீட்டிற்கு விருந்தாளி வந்தால் கத்திரிக்காய் தக்காளி கட் செய்தால் போதும் உடனடியாக தாளித்து சுலபமான. பஜ்ஜி( கடைசல்) செய்துவிடலாம் இது சாதத்திற்கு இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும் .

சமையல் குறிப்புகள்
- 1
கத்திரிக்காயை பொடிப் பொடியாக கட் பண்ணி தண்ணீரில் போட்டு வைக்கவும். வெங்காயத்தையும் தக்காளியையும் தனித்தனியாக பொடிப் பொடியாக கட் பண்ணி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு கடலை பருப்பு வெங்காயம் மிளகாய் கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.
- 3
பின்னர் கத்தரிக்காயை போட்டு நன்றாக வதக்கவும். 2 நிமிடங்கள் கழித்து தக்காளியையும் போட்டு நன்றாக வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் எடுத்து ஒரு பருப்பு கடையும் மத்தில் ஒரு கடைசல் கடைந்து பரிமாறவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil)
- உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil)
- கோதுமைஆரோக்கியதோசை(கேரளாவில்ஏலாஞ்சிஎன்பார்கள்)(wheat healthy dosai recipe in tamil)
- பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
- ரஸ்க் அல்வா (Rusk halwa recipe in tamil)

கமெண்ட்