ரக்டா பேட்டீஸ்(Ragda Patties Recipe in Tamil)
ஆரோக்கியமான ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் ஒன்றுதான் வட இந்தியாவில் பிரபலமான ரக்டா பேட்டீஸ்.
ரக்டா பேட்டீஸ்(Ragda Patties Recipe in Tamil)
ஆரோக்கியமான ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் ஒன்றுதான் வட இந்தியாவில் பிரபலமான ரக்டா பேட்டீஸ்.
சமையல் குறிப்புகள்
- 1
பட்டாணியை 8 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து குக்கரில் சேர்க்கவும் இதில் இரண்டு கப் தண்ணீர் எண்ணெய் மஞ்சள் தூள் நீளமாக நறுக்கிய இஞ்சி பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்த பின் சிறுத்தியில் ஐந்து நிமிடங்கள் வேகவைத்து அடுப்பை அணைக்கவும். ஆரியபின் குக்கரை திறந்து பட்டாணியை ஒன்றும் பாதியுமாக மசித்து விடவும்.
- 2
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துருவிக் கொள்ளவும். இதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சாட் மசாலா பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சோள மாவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இவற்றை உருண்டைகளாக பிடித்து கட்லெட் வடிவில் தட்டிக் கொள்ளவும். பானில் நெய் சேர்த்து சூடானதும் தயார் செய்த கட்லட்களை இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
- 3
பரிமாறும் தட்டில் பட்டாணிக் கலவையை தேவையான அளவு ஊற்றி அதன் மேல் இரண்டு கட்டல்களை வைத்து அதற்கு மேல் விருப்பத்திற்கு ஏற்ப பச்சை சட்னி இனிப்பு சட்னி பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி கொத்தமல்லி மற்றும் கொஞ்சம் அதிகமாக ஓமப்பொடியை சேர்த்துக் கொள்ளவும்.
- 4
அதற்கு மேல் ஒரு சிட்டிகை மிளகாய் தூள் ஒரு சிட்டிகை சாட் மசாலா மற்றும் ஒரு சிட்டிகை வறுத்த சீரகத்தூள் தூவி வெதுவெதுப்பாக பரிமாறவும். சாப்பிட சுவையாக இருக்கும்.
Similar Recipes
More Recipes














கமெண்ட்