பிரியாணி ஸ்டைல் பாஸ்தா(biryani pasta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- 2
வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
- 3
இஞ்சி பூண்டு வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்
- 4
தக்காளி வதங்கிய பின் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு இவைஅனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்
- 5
மசாலா வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி, புதினா இலை எல்லாத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்
- 6
கொத்தமல்லி புதினா நன்கு வதங்கியதும் பாஸ்தா தண்ணீர் மற்றும் தயிர் சேர்த்து கிளறவும்
- 7
உப்பு மற்றும் காரம் சரியாக உள்ளதா என்று ருசித்து விட்டு குக்கரை இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும் குக்கரில் விசில் சத்தம் அடங்கியதும் பாஸ்தாவை எடுத்து பரிமாறலாம்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16569163















கமெண்ட்