இடித்து வைத்த டிபன் சாம்பார்(tiffin sambar recipe in tamil)

இடித்து வைத்த டிபன் சாம்பார்(tiffin sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடையில் கடலைப்பருப்பு உளுந்து கொத்தமல்லி சீரகம் மிளகு வரமிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து சிறு தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
- 2
வறுத்த பருப்பு வகைகள் அனைத்தையும் ஆற விடவும் பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
- 3
குக்கரில் பருப்பு வெங்காயம் தக்காளி சீரகம் மஞ்சள் பூண்டு கத்திரிக்காய் உருளைக்கிழங்கு கேரட் பெருங்காயத்தூள் இவை அனைத்தையும் சேர்த்து ஐந்து விசில் விட்டு வேக விடவும்
- 4
பருப்பு வெந்ததும் ஒரு டீஸ்பூன் கடலை மாவு கரைத்து வேக வைத்த பருப்பில் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்
- 5
இரண்டு நிமிடம் கழித்து அரைத்து வைத்துள்ள சாம்பார் பொடி உப்பு சேர்த்து கலந்து 5 நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும்
- 6
மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து தாளித்து சாம்பார் சேர்க்கவும் இப்போது சாம்பார் தயார்
Keywords
Similar Recipes
More Recipes



















கமெண்ட்