மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)

மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மட்டனை கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து சிறிதளவு வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு, மஞ்சள் தூள் இவை அனைத்தையும் சேர்த்து கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேக விடவும்
- 2
அரிசியை ஊற வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் கடலை எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பின் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 5
இஞ்சி பூண்டு நன்கு வதங்கியதும் மிளகாய் தூள் மல்லித்தூள் கரம் மசாலா, தக்காளி, இவை அனைத்தையும் சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை நன்கு வதக்கவும்
- 6
தக்காளியுடன் வேக வைத்துள்ள மட்டனை மட்டும் சேர்த்து மசாலாவுடன் கிளறி பத்து நிமிடம் விடவும்
- 7
கொத்தமல்லி புதினா சேர்த்து கிளறி விடவும்
- 8
கொத்தமல்லி வதங்கியதும் மீதமுள்ள தண்ணீரை மற்றும் தயிர் சேர்த்து கொதிக்க வைத்து
- 9
ஊற வைத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து வேக விடவும்
- 10
அரிசி பாதி வெந்ததும் சிறு தீயில் வைத்து வெந்ததும் சூடாக பரிமாறலாம்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

























கமெண்ட்