எக் பூர்ஜி மசாலா(egg burji masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து பொரிய விடவும் பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 2
பின் மல்லித் தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும் பின் சிறிது தண்ணீர் ஊற்றி மசாலா பச்சை வாசனை போக கொதிக்க விடவும்
- 3
பின் அடித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் கூட 2 கை தண்ணீர் தெளித்து நன்கு கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16702775













கமெண்ட்