*பனீர் புர்ஜி*(paneer burji recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#KE
இந்த பனீர் புர்ஜி செய்வது மிகவும் சுலபம். சுவையானது.இது சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.

*பனீர் புர்ஜி*(paneer burji recipe in tamil)

#KE
இந்த பனீர் புர்ஜி செய்வது மிகவும் சுலபம். சுவையானது.இது சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
6 பேரி
  1. 200 கிபனீர்
  2. 2மீடியம் சைஸ் வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 3/4பெரிய ப.குடமிளகாய்
  5. 1சிறியமஞ்சள் குடமிளகாய்
  6. 1 ஸ்பூன்தனி மி.தூள்
  7. 1 டீ ஸ்பூன்ம.தூள்
  8. 1 ஸ்பூன்சீரகத்தூள்
  9. 2 டீ ஸ்பூன்கரம் மசாலா தூள்
  10. 2 ஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது
  11. 2கீறின ப.மிளகாய்
  12. ருசிக்குஉப்பு
  13. 2 ஸ்பூன்நெய்
  14. 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  15. சிறிதுதண்ணீர்
  16. 2 டேபிள் ஸ்பூன்நறுக்கின கொத்தமல்லி தழை
  17. அலங்கரிக்க:- துருவிய பனீர், கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மஞ்சள், பச்சை குடமிளகாய், அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.ப.மிளகாயை கீறிக் கொள்ளவும்.

  2. 2

    பனீரை துருவிக் கொள்ளவும்.

  3. 3

    மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டை அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம், உப்பை சேர்த்து கிளாஸியாக நன்கு வதக்கவும்.

  5. 5

    அடுத்து, இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.

  6. 6

    வதங்கியதும், தக்காளி, ம.தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், ப.மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

  7. 7

    பிறகு, குடமிளகாயை சேர்த்து வதக்கிய தும், சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும்.

  8. 8

    அடுத்து துருவிய பனீரை சேர்க்கவும்.

  9. 9

    அடுப்பை ஹையில் வைத்து,ஒன்று சேர கிளறி 2 நிமிடம் வதக்கினதும், அடுப்பை நிறுத்தி விட்டு, கொத்தமல்லி தழையை போட்டு இறக்கவும்.

  10. 10

    இறக்கினதும், பௌலுக்கு மாற்றி மேலே துருவிய பனீரை சேர்க்கவும்.

  11. 11

    இப்போது, சுவையான, சுலபமான,*பனீர் புர்ஜி* தயார். இது, சப்பாத்தி, நாண், கார்லிக் நாண்,பராத்தா, ருமாலி ரோட்டி, பூரி அனைத்திற்கும் ஆப்ட்டாக இருக்கும். செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.

  12. 12

    குறிப்பு:- சிறிது கதூரி மேத்தி, சாட் மசாலா 1/2 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்.என்னிடம் இல்லாததால் சேர்க்கவில்லை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes