கனவா மீன் மசாலா(squid masala recipe in tamil)

Asma Parveen @TajsCookhouse
கனவா மீன் மசாலா(squid masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சுத்தம் செய்த கனவா மீன் உடன் உப்பு மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற விடவும்.
- 2
பெரிய வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பானில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் பூண்டு கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். இதோடு வரமிளகாயை கொரகொரப்பாக அரைத்து சேர்க்கவும் கூடவே மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
வதங்கிய பின் ஊறவைத்த கனவா மீனை இதில் சேர்த்து இதோடு பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் பத்து நிமிடங்கள் வேக விடவும்.
- 4
மீன் வெந்து விடும் அதன் பிறகு மிளகு சீரகத்தை அரைத்து பொடியை சேர்க்கவும். கடைசியாக மீதமுள்ள கருவேப்பிலையை தூவி பிரட்டி எடுத்து பத்து நிமிடம் மூடி வைத்து அதன் பிறகு பரிமாறலாம்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16707374










கமெண்ட்