சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து மூன்று முறை கழுவி மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி கிரைண்டரில் போட்டு ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்
- 2
கூட துருவிய வெல்லம் மற்றும் தேங்காய் சேர்த்து அரைக்கவும்
- 3
பின் இந்த மாவை ஒரு இரண்டு மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும் பின் பொடியாக நறுக்கிய முந்திரி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
பின் நெய் மற்றும் எண்ணெய் கலந்து சூடாக்கவும் (முழுவதும் நெய்யில் பொரித்து எடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்)
- 5
பின் பணியாரக்கல்லில் நெய் விட்டு சூடானதும் மாவை ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து மெதுவாக திருப்பி விடவும்
- 6
பின் மீண்டும் இரண்டு நிமிடம் கழித்து சூடான நெய் எண்ணெய் கலவையில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 7
அடுப்பை மிதமான தீயில் வைத்து நிதானமாக வேகவிடவும்
- 8
சூடான சுவையான உண்ணியப்பம் ரெடி
- 9
பணியாரக்கல்லில் போட்டு பிறகு எண்ணெயில் போட்டு பொரிக்கும் போது உள்ள நன்றாக வெந்து இருக்கும் வடிவம் நன்றாக இருக்கும்
- 10
Similar Recipes
More Recipes
































கமெண்ட்