*மேங்கோ ஐஸ்க்ரீம்*

மாம்பழ சீசன் இது. மாம்பழம் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும், மாம்பழத்தில் ஐஸ்க்ரீம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வது மிகவும் சுலபம்.
*மேங்கோ ஐஸ்க்ரீம்*
மாம்பழ சீசன் இது. மாம்பழம் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும், மாம்பழத்தில் ஐஸ்க்ரீம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வது மிகவும் சுலபம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
- 3
சோளமாவை காய்ச்சி ஆறின பாலை 2 டேபிள் ஸ்பூன் விட்டு, கட்டியில்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்.
- 4
பால் கொதித்து, குறுகி ஆடை படிந்ததும், கரைத்த சோளமாவை விட்டு கெட்டியானதும், ஏலத்தூள் சேர்க்கவும்.
- 5
அடுத்து சர்க்கரையை சேர்த்து கொதித்து குறுகினதும் அடுப்பை அணைத்து விட்டு நன்கு ஆறவிடவும்.
- 6
மாம்பழத்தை சுத்தம் செய்து அதன் தோலை நீக்கி, சதைப் பகுதியை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.
- 7
பிறகு ஆறின பாலை சிறிது சிறிதாக விட்டு மைய அரைத்து பௌலுக்கு மாற்றவும்.
- 8
பிறகு டூட்டி ஃப்ரூட்டியை சேர்க்கவும்.
- 9
பௌலில் மூடி போட்டு மூடி, ஃப்ரீஸரில் 8 மணி நேரம் வைக்கவும்.
- 10
பிறகு தட்டிற்கு மாற்றவும். இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*மாம்பழ ஐஸ்க்ரீம்*தயார். இதனை செய்து பார்த்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் என்ஜாய் செய்யவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes



















கமெண்ட் (2)