*மாம்பழ ஹல்வா*

மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது.
*மாம்பழ ஹல்வா*
மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பெரிய மிக்ஸி ஜாரில், மாம்பழ விழுது, சர்க்கரையை சேர்க்கவும்.
- 3
பிறகு மைய அரைக்கவும்.
- 4
அரைத்ததும், பாலை சேர்த்துக் கொள்ளவும்.
- 5
பிறகு மைய அரைக்கவும்.
- 6
பௌலில் சோள மாவு, பால் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்.
- 7
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
- 8
கொதித்து சிறிது கெட்டியானதும், கரைத்த சோளமாவை சேர்த்து, கைவிடாமல் கிளறவும்.
- 9
ஹல்வா பதத்திற்கு கடாயில் ஒட்டாமல் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
- 10
மேலே 2 ஸ்பூன் நெய் விட்டு இறக்கவும்.
- 11
பௌலில் 1 ஸ்பூன் நெய் தடவிக் கொள்ளவும். விழுதை பௌலுக்கு மாற்றவும்.
- 12
இப்போது, சுவையான, சுலபமான,*மாம்பழ ஹல்வா*தயார். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ரெசிபி. செய்து பார்த்து அசத்தி என்ஜாய் செய்யவும்.
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட் (3)