சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒருகனமான வாணலியை அடுப்பில் வைத்து 2ஸ்பூன் நெய் விட்டு ரவையை நல்ல வாசம் வரும் வரை வறுக்கவும்.பின் அதை தனியாக தட்டில் போட்டு ஆற விடவும்.பின் தேங்காய் துருவலை வெறும் வாணலியில் வறுக்கவும்.தேங்காயில்பால் சத்து குறைந்து நல்ல வாசம்வரும்.அப்போதுகேஸைஆப்பண்ணி விடவும்.
- 2
தேங்காய்நல்லஉதிரியாக இருக்கும்.அதை வறுத்த ரவையுடன்சேர்த்துக் கொள்ளவும்.
- 3
ஏலக்காய் பொடித்துக் கொள்ளவும்.முந்திரி, பாதாம்,கிஸ்மிஸ் இவைகளை ஒரு ஸ்பூன் நெய்விட்டுவறுத்துக்கொள்ளவும்.அதை ரவை தேங்காய்கலவையுடன் சேர்த்துக்கொள்ளவும்.
- 4
பாலைக்காய்ச்சி ஆறவிடவும்.ரவை, தேங்காய் கலவையுடன் சர்க்கரையைச் சேர்த்து கலந்து விடவும்.இப்போது பாலைஅதில்சேர்த்து மீண்டும் கலந்து விடவும்.இப்போது பொடித்த ஏலக்காய், மீதி 3ஸ்பூன் நெய்யைசேர்த்து நன்கு கலந்து 10 நிமிடங்கள் அமுக்கி வைய்க்கவும்.சர்க்கரை நன்கு கலந்து இருக்கும்.இப்போது அழகாக உருட்டவும்.
- 5
சுவையான தேங்காய்ரவை லட்டு ரெடி.ரொம்ப நன்றாகஇருக்கும் சர்க்கரை குறைக்க வேண்டுமானால், கம்மி பண்ணி கொள்ளலாம்.🙏😊நன்றி மகிழ்ச்சி.
Keywords
Similar Recipes
More Recipes

















கமெண்ட்