சமையல் குறிப்புகள்
- 1
இடியாப்பம் செய்ய:. அரிசியை இரண்டு முறை அலசி பின் 6 மணி நேரம் வரை ஊறவிடவும் பின் சுத்தமான துணியில் பரவலாக போட்டு மின்விசிறிக்கு அடியில் உலரவிடவும் நன்கு உலர்த்தி மாவு மிஷினில் கொடுத்து திரித்து ஒரு நாள் முழுவதும் மீண்டும் உலரவைத்து எடுத்து ஜலித்து ஏர்டைட் கன்டெயினில் போட்டு வைத்து கொள்ளவும்
- 2
இந்த மாவை பயன்படுத்தி இடியாப்பம்,கொழுக்கட்டை,இலை அடை ஆகிய அனைத்தையும் செய்ய ஏற்றது
- 3
ரெடியான இடியாப்பம் மாவை வெறும் வாணலியில் போட்டு இரண்டு நிமிடம் வரை வறுக்கவும்
- 4
பின் தண்ணீர் உடன் உப்பு மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விட்டு வறுத்த மாவுடன் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 5
பின் 15 நிமிடங்கள் வரை ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்
- 6
பின் திறந்து நன்கு பிசைந்து ஓமப்பொடி அச்சில் போட்டு இட்லி தட்டில் பிழிந்து ஆவியில் 10 நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும்
- 7
ஆறியதும் உதிர்த்து வைத்து கொள்ளவும்
- 8
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு,கறிவேப்பிலை,கடலைப்பருப்பு,உளுத்தம்பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளித்து பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் லெமன் சாறு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
- 9
கொதிக்கும் போது சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 10
லெமன் சாறு நன்கு சுருண்டு வரும் போது தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 11
பின் உதிர்த்த இடியாப்பம் மற்றும் கொத்தமல்லி தழை தூவி கலந்து கிளறி இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட்