சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு ஒரு பாத்திரத்தில் பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து அத்துடன் பொடிகளையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.. ஊறவைத்த பன்னீரை கடாயில் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்..
- 2
ஒரு கடாயில் வெண்ணெய் விட்டு பட்டை கிராம்பு, ஏலக்காய் வதக்கியத்துடன் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்..
- 3
வெங்காயம் லேசாக வதங்கினதும் அதனுடன் இஞ்சி பூண்டு தக்காளி சேர்த்து வதக்கவும் அதுவும் லேசாக வதங்கியதும் அதனுடன் முந்திரி பருப்பையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்..
- 4
- 5
பனீர் வறுத்த கடாயிலேயே மீண்டும் வெண்ணெய் சேர்த்து அதில் பிரிஞ்சி இலை தாளித்து பொடிகளை சேர்த்து லேசாக வருத்தவுடன் நாம் வதக்கிய வெங்காயம் தக்காளியை மிக்ஸியில் அரைத்து அதனுடன் சேர்த்து கலக்கவும்...
- 6
வெங்காய தக்காளி விழுதுடன் சிறிது தண்ணீரும் ஊற்றி கொதிக்க விடவும்
- 7
குழம்பு நன்றாக கொதித்ததும் அதனுடன் நாம் வறுத்து வைத்துள்ள பனீரையும் சேர்த்து கொதிக்க விடவும்.. பன்னீர் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் கொதித்ததும் இறுதியாக கஸ்தூரி மேதியையும் பிரஸ் கிரீமையும் சேர்த்து இறக்கவும்..
- 8
இப்போது சூடான சுவையான பனீர் பட்டர் மசாலா தயார்..
Similar Recipes
More Recipes



























கமெண்ட் (10)