சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)

#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்..
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் எண்ணெய் விட்டு கரம் மசாலாக்களை தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்..
- 2
வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய் புதினா சேர்த்து வதக்கவும் அதுவும் வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும் எல்லாம் வதங்கியதும் அதனுடன் மிளகாய் தூளையும் சேர்த்து வதக்கவும் எண்ணெயிலேயே மிளகாய் தூள் வதங்கும் போது பிரியாணியின் கலர் நன்றாக இருக்கும்..
- 3
மிளகாய் தூள் வதங்கியதும் தயிரையும் சேர்த்து வதக்கவும் அது லேசாக வழங்கியதும் அதனுடன் தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கவும்..
- 4
எல்லாம் ஒன்றாக வதங்கியதும் அதனுடன் சிக்கனையும் சேர்த்து உப்பையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வேக விட்டு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்..
- 5
இதை நான் எலெக்ட்ரிக் குக்கரில் செய்துள்ளேன்.. அரிசி எனக்கு மூன்றரைக் கப் இருந்தது அதனால் நான் ஏழு கப் தண்ணீர் சேர்த்துள்ளேன்.. அரிசியை நான் ஊற வைக்கவில்லை..
- 6
அரிசியில் தண்ணீர் சேர்த்தவுடன் அதில் நாம் செய்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து மேலே சிறிது புதினா இலையும் சேர்த்து கலந்து குக்கரை ஸ்டார்ட் செய்து விடவும்..
- 7
சிறிது நேரத்தில் பிரியாணி தயாராகிவிடும்..
- 8
இப்போது சூடான சுவையான சிக்கன் பிரியாணி தயார்..
Similar Recipes
More Recipes





















கமெண்ட் (2)