கதம்ப குழம்பு (Mixed vegetable gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கதம்ப குழம்பு வைக்க தேவையான காய்கறிகளை எடுத்து,நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வதக்கவும்.பொரிந்ததும் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் மொச்சை கொட்டைகளை சேர்த்து வதக்கவும்.
- 4
அதன் பின் உருளை கிழங்கு,தக்காளி, மற்ற காய்களை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
இரண்டு நிமிடங்கள் வதங்கியதும் மஞ்சள் தூள்,சாம்பார் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
- 6
அதன் பின் புளிக்கரைசலை சேர்த்து,தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 7
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்,சாம்பார் வெங்காயம்,சீரகம்,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து தேங்காய் பால் எடுத்து தயாராக வைக்கவும்.
- 8
முதல் பாலை அப்படியே வைத்து கடைசியாக சேர்த்து கலந்து இறக்கிவிடவும்.
- 9
இரண்டாம் பாலை எடுத்து, வேகும் காய்களில் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 10
கடைசியாக முதல் பாலை சேர்த்து கலந்து,ஒரு நிமிடம் விட்டு, நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கினால் சுவையான, சத்தான கதம்ப குழம்பு தயார்.
- 11
தயாரான குழம்பை எடுத்து ஒரு பௌலில் சேர்த்து,மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
- 12
இப்போது பொங்கல் ஸ்பெஷல் கதம்ப குழம்பு சுவைக்கத் தயார்.
- 13
இதில் நீங்கள் விருப்பப்பட்ட காய்களை சேர்த்து சமைக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
அவரைக்காய் பொரியல் (Broad beans subji recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சமைத்த neai சாதம்,அவரைக்காய் பொரியல். Renukabala -
ஆணியன், கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு இஞ்சி மசால்(VEGETABLE MASAL RECIPE IN TAMIL)
#ed3எப்போதும் செய்யும் உருளைக்கிழங்கு வெங்காய மசாலா உடன் தக்காளி,இஞ்சி மற்றும் கேரட் சேர்த்து செய்துள்ளேன். பட்டாணி இருந்தால் பச்சைப்பட்டாணி சேர்த்தும் செய்யலாம். வெங்காயம் மணக்கும் பொழுது அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வதக்கினால் மசால் மிகவும் ருசியாக வித்தியாசமான சுவையுடன். சமையல் ஐயர் கொடுத்த டிப்ஸ் இது. Meena Ramesh -
பலாக்கொட்டை கத்தரிக்காய் சாம்பார் (jack fruit brinjal sambar recipe in tamil)
பழங்காலத்து கிராமத்தில் செய்த இந்த பலாக்கொட்டை, கத்தரிக்காய் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும். சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா உணவுகளுடன் பொருத்தமாக இருக்கும்.#vk Renukabala -
-
முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
முளைகட்டிய பச்சைப்பயறு குழம்பு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. சுவையோ அபாரம். எனவே அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #Week11 #Sprouts Renukabala -
கதம்ப சாம்பார் (கலவை சாம்பார்)(kathamba sambar recipe in tamil)
#pongal2022 கதம்ப சாம்பார்க்கு முக்கியமா "அக்காய்"கள் வேணுங்க... அதாவது நம்ம நாட்டு காய்கள், அரசாணிக்காய், மேரக்காய்(சௌ சௌ), அவரைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய், கத்திரிக்காய், கோவக்காய் இந்த மாதிரி அக்காய்கள ஒரு 5 (அ) 7, ஒன்பது கிடைச்சா கூட சேர்த்துக்கலாம். இந்த மாதிரி நாட்டு அக்காய்கள் சேர்ந்து அபரிமிதமான சுவையில இருக்குங்க கலவை சாம்பார்...ஊர்ல அம்மா வீட்டுக்கு பக்கத்துல ஒரு அம்மாச்சி நாகர்கோவில் காரங்க.. ஒவ்வொரு பொங்கலுக்கும் அவங்க கதம்ப சாம்பார் வீட்டுக்கு வந்துடும்.. அருமையான சுவையா இருக்கும்.. இப்போ கதம்ப சாம்பாருக்காக ஊருக்காங்க போக முடியும்.. நம்மளே செய்வோம்💪💪 Tamilmozhiyaal -
-
வெந்தய குழம்பு (fenugreek gravy recipe in Tamil)
#hf இது சுலபமாகவும் செய்யலாம் சுவையும் அருமையாக இருக்கும் உடலுக்கு மிகவும் நல்லது.. Muniswari G -
செட்டிநாடு கதம்ப சாம்பார் (Chettinad kathamba sambar recipe in tamil)
#GA4அனைத்துவித நாட்டுக் காய்கறிகள் பயன்படுத்தி ஆரோக்கியமான சாம்பார் செய்யும் முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil -
-
காய்கறி பாயா (Vegetable paayaa recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து ஆம்லெட் ஆப்பம் அதற்கு பொருத்தமான காய்கறி பாயா செய்துள்ளோம். Renukabala -
நாட்டுக் காய்கறி கதம்ப பொரியல் (naatu kaikari kathamba poriyal recipe in Tamil)
#பொங்கல்சிறப்புரெசிபிகள்Janani vijay
-
-
-
-
எண்ணெய் (முள்)கத்தரிக்காய் குழம்பு (Throny brinjal gravy)
#pt இந்த முள் கத்திரிக்காய்க்கு சமீபத்தில் தான் புவிசார் குறியீடு (geographical indication) கிடைத்தது.. அம்மா வீடு வேலூர் என்பதால் எனக்கு அங்கிருந்து அம்மா வாங்கிக் கொண்டு வருவார்கள் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.. வேலூர் சுற்று வட்டாரத்தில் மட்டுமே கிடைக்கும்.. Muniswari G -
தாழ்ச்சா (Dalcha recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சேர்ந்து சமைத்த வெஜிடபிள் பிரியாணி தாழ்ச்சா ரெசிபியை இங்கு பகிர்ந்துள்ளோம். Renukabala -
பருப்பு அரிசி சாதம் (Dal rice recipe in tamil)
சங்கராந்தி ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம். பண்டை காலத்தில் போகிப்பண்டிகை இரவு இந்த சாதம் செய்து,முதலில் கொஞ்சம் சாதத்தை எடுத்து சங்கராந்திக்கு வைப்பார்கள். மறுநாள் காலை அந்த சாதத்தை ஊரில் உள்ள ஒருவர் வந்து வாங்கி செல்வார்கள்.#Jp Renukabala -
-
-
-
குதிரைவாலி தயிர் சாதம் (Banyard Millet curd rice recipe in tamil)
#Kuகுதிரைவாலி அரிசியில் சுண்ணாம்பு சத்து,நார் சத்து, இரும்பு,புரதம், உயிர் சத்தும் அதிகம் உள்ளது. இது இதய நோய்,புற்று நோய்,உயர் இரத்த அழுத்தம்,செல்களை பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகவும் செயல் படுகிறது. Renukabala -
தக்காளி சாம்பார் (Tomato Samar recipe in tamil) 🍅
#VTவிரத நாட்களில் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் சமைப்பது வழக்கம். அதனால் இங்கு நான் வெங்காயம் சேர்க்காமல் தக்காளி மட்டும் சேர்த்து துவரம் பருப்பு சாம்பார் செய்துள்ளேன். Renukabala -
சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)
#Cookerylifestyleசிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம், இரும்பு சத்து,மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின் சி அதிகம் உள்ளது. ஊட்ட சத்துக்கள் நிறைந்த சிகப்பு அவல் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது. Renukabala -
கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) (Kathirikkaai gravy recipe in tamil)
மிகவும் சுவையான கத்தரிக்காய் வைத்து செய்த இந்த கிரேவியை சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala
More Recipes
கமெண்ட் (5)