தினை மார்பிள் டோக்ளா (Thinai Marble Dhokla Recipe in Tamil)

Raihanathus Sahdhiyya
Raihanathus Sahdhiyya @foodie_feeds
Tamil Nadu

#goldenapron2 #குஜராத்தி #gujju_cuisine
சைவ வகைகளுக்கும் சத்தான உணவுகளுக்கும் பெயர் போன மாநிலம் குஜராத்தின் புகழ்பெற்ற சிற்றுண்டி வகைகளுல் ஒன்று டோக்ளா !புதினா மற்றும் கார சட்னியுடன் உண்ண மிகவும் சுவையாக இருக்கும். கடலை மாவை பிரதானமாக வைத்து சத்தான முறையில் அவித்து செய்யப்படும் இதிலும் பல வகைகள் உண்டு, ரவை , கடலை மாவு , அரிசி மாவு என மாறுபடும். நான் நம் பாரம்பரிய சிறுதானிய வகைகளுள் ஒன்றான தினையை சேர்த்து மார்பிள் கேக் பாணியில் செய்துள்ளேன் !

தினை மார்பிள் டோக்ளா (Thinai Marble Dhokla Recipe in Tamil)

#goldenapron2 #குஜராத்தி #gujju_cuisine
சைவ வகைகளுக்கும் சத்தான உணவுகளுக்கும் பெயர் போன மாநிலம் குஜராத்தின் புகழ்பெற்ற சிற்றுண்டி வகைகளுல் ஒன்று டோக்ளா !புதினா மற்றும் கார சட்னியுடன் உண்ண மிகவும் சுவையாக இருக்கும். கடலை மாவை பிரதானமாக வைத்து சத்தான முறையில் அவித்து செய்யப்படும் இதிலும் பல வகைகள் உண்டு, ரவை , கடலை மாவு , அரிசி மாவு என மாறுபடும். நான் நம் பாரம்பரிய சிறுதானிய வகைகளுள் ஒன்றான தினையை சேர்த்து மார்பிள் கேக் பாணியில் செய்துள்ளேன் !

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1 கப் தினை
  2. 1/2 கப் ரவை
  3. 1/4 கப் கடலை மாவு
  4. 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  5. 1 மேஜைக்கரண்டி தயிர்
  6. தேவைக்கேற்ப உப்பு
  7. 1 தேக்கரண்டி எலுமைச்சைச் சாறு
  8. 1 கப் தண்ணீர் (தேவைக்கேற்ப)
  9. சிவப்பு சட்னிக்கு:
  10. 2 சிறிய தக்காளி
  11. 4 காய்ந்த மிளகாய்
  12. 1 பல் பூண்டு
  13. பச்சை சட்னிக்கு
  14. 1/4 கப் மல்லி இலை
  15. 1/4 கப் புதினா இலை
  16. 1 பல் பூண்டு
  17. 2 பச்சை மிளகாய்
  18. தாளிக்க:
  19. 2 மேசைக்கரண்டி எண்ணெய்
  20. 1 தேக்கரண்டி கடுகு
  21. 8-10 கருவேப்பிலை
  22. 2 பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தினையை தண்ணீர் ஊற்றி ஒன்றரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும் (தினையை மிக்ஸியில் பவுடர் ஆக்கியும் பயன் படுத்தலாம்)

  2. 2

    தண்ணீரை வடித்து தினை மட்டும் எடுத்து மிக்சியில் போட்டு நன்றாக தோசை மாவு போல் அரைக்கவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் ரவை மற்றும் கடலைமாவு எடுத்து கொள்ளவும்

  4. 4

    தில் அரைத்து வைத்த தினை மாவையும் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாகக் கலக்கவும்

  5. 5

    பின்பு தேவையான அளவு உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கலக்கி பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும்

  6. 6

    முதலில் பச்சை நிற சட்னி செய்வதற்கு மல்லி இலை புதினா இலை பச்சை மிளகாய் பூண்டு ஆகியவற்றை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். பச்சை சட்னி தயார்.

  7. 7

    சிவப்பு நிற சட்னி செய்வதற்கு முதலில் காய்ந்த மிளகாய் கால் மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அப்பொழுதே தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு ப்ளான்ச் செய்து தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  8. 8

    பிறகு தோலுரித்து வைத்து தக்காளி, ஊற வைத்து எடுத்த காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். சிவப்பு நிற சட்னி தயார்

  9. 9

    இப்பொழுது தயாரித்து வைத்துள்ள டோக்ளா மாவை மூன்று பங்காக பிரிக்கவும்

  10. 10

    ஒரு பங்கில் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும். மீதி இரண்டு பங்குகளில் ஒரு பங்கில் சிவப்பு நிற சட்னியும் மற்றொரு பங்கில் பச்சை நிற சட்னியும் சேர்த்து நன்றாக கலக்கவும்

  11. 11

    ஒரு குக்கர் அல்லது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீர் ஊற்றி ஒரு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடம் தண்ணீரை கொதிக்க விடவும்.

  12. 12

    இறுதியாக மூன்று மாவுகளிலும் பேக்கிங் பவுடர் அரை ஸ்பூன் வீதம் சேர்த்து நன்றாக கலக்கி உடனடியாக ஒரு தட்டில் (அல்லது கேக் டின்) மூன்று மாவையும் அடுத்தடுத்து ஊற்றவும். இறுதியாக டூத் பிக் கொண்டு டிசைன் செ‌ய்யவு‌ம்

  13. 13

    அந்தத் தட்டை நீர் ஊற்றி கொதிக்கும் பாத்திரத்தில் வைத்து ஒரு மூடி போட்டு மூடி 10 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். டூத் பிக் கொண்டு நடுவில் குத்தி பார்த்து வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். முழுவதும் ஆறிய பின்னரே ஒரு தட்டில் கவிழ்த்தி துண்டுகளாக வெட்டவும்.

  14. 14

    ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கடுகு கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து அதை செய்து வைத்த டோக்ளா மீது ஊற்றி பரிமாறவும்

  15. 15

    டோக்ளாவிலே சட்னி சேர்த்துள்ளதால் த‌னியாக சட்னி பரிமாற தேவையில்லை. இந்த டோக்ளா மிகவும் சுவையுடன் இருக்கும்.

  16. 16

    டிப்: நல்ல மிருதுவாக ஸ்பான்ஜியாக வேண்டும் என்றால் தண்ணீருக்கு பதில் 1 கப் தயிர் சேர்த்து 1/2 மணி நேரம் கழித்து அவிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Raihanathus Sahdhiyya
அன்று
Tamil Nadu
A post graduate student who has the hobby of cooking especially trying out new and healthy recipes
மேலும் படிக்க

Similar Recipes