கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil)

#WA இதில் நிறைய காய்கறிகள், கீரை, பருப்பு என நிறைய சேர்த்துள்ளதால் இது மிகவும் சத்தான உணவு கூட.. திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலமான ஒரு உணவு வகை இது..
கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil)
#WA இதில் நிறைய காய்கறிகள், கீரை, பருப்பு என நிறைய சேர்த்துள்ளதால் இது மிகவும் சத்தான உணவு கூட.. திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலமான ஒரு உணவு வகை இது..
சமையல் குறிப்புகள்
- 1
இது ஒவ்வொரு ஸ்டெப்பாக தான் செய்ய வேண்டும் மொத்தமாக குக்கரில் வைக்கக் கூடாது.. பாரம்பரிய சுவை வேண்டும் என்றால் பாத்திரத்தில் தான் செய்ய வேண்டும் குக்கரில் செய்யக்கூடாது.. ஒரு பாத்திரத்தில் பருப்பை சேர்த்து அது அரைப்பதம் வேகம் அளவு வேக வைக்கவும்..
- 2
பருப்பு அரைப்பதம் வெந்ததும் அதனுடன் மஞ்சள் தூள் பெருங்காயம் தேங்காய் துருவியது சேர்த்துக் கொள்ளவும்..
- 3
முருங்கைக்கீரையை உருவி நன்றாக அலசி பொடியாக நறுக்கி வெந்து கொண்டிருக்கும் பருப்பில் சேர்த்து வேக விடவும்..
- 4
அதுவும் ஒரு கொதி வந்ததும் வேக நேரம் எடுக்கும் காய்கறிகளான முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், கருணை கிழங்கு முதலில் சேர்த்து அரைப்பதும் வேக விடவும்..
- 5
அந்த காய்கறிகள் எல்லாம் அரைப்பதும் வெந்ததும் அதனுடன் உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய் சேர்த்து வேக விடவும்.. காய்கறிகள் ஒன்றாக கலந்ததும் அதனுடன் அரிசியையும் சேர்க்கவும்..
- 6
அரிசியை சேர்த்து கலந்து மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும் அது வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும் அதிக தண்ணீர் சேர்த்து கரைக்கக் கூடாது..
- 7
புளி கரைசலை தனியாக எடுத்து வைத்த உடன் மிக்ஸி ஜாரில் அரை கப் வெங்காயம் பூண்டு சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளவும்
- 8
புளிக்கரைசலுடன் நாம் அரைத்து வைத்துள்ள வெங்காயம் பூண்டு மசாலாவும், மிளகாய் தூளும் உப்பும் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
- 9
சாதமும் காய்கறியும் சேர்ந்து முக்கால் பதம் வெந்ததும் அதனுடன் நாம் கரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்றாக வேக விடவும்..
- 10
தண்ணீர் வற்றி சாதம் ரெடி ஆனதும் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை வடகம் தாளித்து சேர்க்கவும் மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை நன்றாக வதக்கி அதையும் சாதத்துடன் சேர்க்கவும்.
- 11
இப்போது சூடான சுவையான திருநெல்வேலி ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு தயார்..
- 12
குறிப்பு: இதில் நீர் காய்கறிகள் எதுவும் சேர்க்கக்கூடாது உதாரணத்திற்கு முள்ளங்கி சௌசௌ அந்த மாதிரி.. அதேபோல் பட்டாணி காலிஃப்ளவர் புடலங்காய் பூசணிக்காய் இதுபோல் காய்கறிகளும் சேர்க்கக்கூடாது..
பாரம்பரிய சுவை வேண்டுமென்றால் மிளகாயை அம்மியில் அரைத்து சேர்க்கும்போது சுவை அருமையாக இருக்கும்.. அதேபோல் இதை மொத்தமாக குக்கரில் வைக்கக் கூடாது ஒவ்வொரு ஸ்டெப்பாக செய்தால் தான் ருசி அருமையாக இருக்கும் சிறிது நேரம் எடுக்கும் மற்ற சமையலை விட ஆனால் சுவை அருமையாக இருக்கும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
துவரம் பருப்பு சாதம் (toor dal rice recipe in tamil)
#made4இது திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... இதில் முருங்கைக் கீரையும் சேர்த்து செய்துள்ளதால் இது மிகவும் சத்தானதும் கூட.. Muniswari G -
கூட்டான் சோறு
#vattaramகூட்டான்சோறு - மிகவும் சுலபமாக செய்யப்படும் ஒரு உணவு. இதனின் சுவை அருமையாக இருக்கும். இதில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட காய்கறிகள் இருப்பதால் , இதில் சத்துகள் அதிகம் . அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.vasanthra
-
முருங்கைக்கீரை சாம்பார்
#momமுருங்கைகீரையில் இரும்புச் சத்து சுண்ணாம்பு சத்து கணிசமாக உள்ளது.கர்ப்பிணிகள் சராசரியாக சாப்பிடும் உணவோடு வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும். குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைகீரை என கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும். Shyamala Senthil -
-
-
#காம்போ 1 மணத்தக்காளி வத்தக்குழம்பு
இந்த வத்தக்குழம்பு வெஜ் போகா உப்புமாவிற்கு காம்போவாகஇருக்கும் இது மிகவும் வித்தியாசமான காம்போ ஆகும் Jegadhambal N -
-
புளியில்லா கறி(no tamarind curry recipe in tamil)
#vt இது திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பிரபலமான ரெசிபி... எனது குடும்பத்தில் அடிக்கடி செய்யும் ஒரு ரெசிபியும் கூட.. இது எனது ஆச்சி, அம்மா சொல்லிக்கொடுத்த ரெசிபி.. இதில் புளியோ தக்காளியோ சேர்க்க மாட்டார்கள் இது பத்திய குழம்பு மாதிரியும் பயன்படுத்தலாம் குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு இந்த குழம்பை வைத்து கொடுப்பார்கள் உடலுக்கும் நல்லது.. Muniswari G -
பாலக் கீரை பக்கோடா (spinach pakoda)
சத்துக்கள் நிறைந்த பாலக் கீரை வைத்து செய்த பக்கோடா மிகவும் சுவையாக இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.#NP3 Renukabala -
-
பழமையான வேர்கடலை சோறு
#ONEPOTபழமையான வேர்க்கடலை சோறு இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளத்தை ஆயிலில் பொரித்து சாப்பிட வேண்டும். சூடாக இருக்கும் பொழுது சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.😄😄 Shyamala Senthil -
-
-
-
இட்லி (idly)
தென் இந்திய மக்களின் பாரம்பரிய உணவு இட்லி. உடம்பு சரியியல்லை எனில் பரிந்துரைப்பது, எளிதில் ஜீரனிக்கக் கூடிய உணவு என நிறைய சொல்லலாம்.#breakfast Renukabala -
பருப்பு கீரை கடைசல்
#Nutrient1பருப்பு கீரை.சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை ஆகும். பருப்புக்கீரையில் அதிக அளவில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி ஆகியவை உள்ளன. பருப்பு கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து சமைப்பதால் இதில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது . Shyamala Senthil -
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
பிசிபேளேபாத் (Bisibelebath recipe in tamil)
கர்நாடகா பேமஸ் பிஸிபேளே பாத். இந்த உணவு எல்லா காய்கள், பருப்பு, அரிசி எல்லாம் சேர்த்து செய்யப்படுவதால், இதில் எல்லாவித உடைசலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது. சுவையாகவும் இருக்கும்.#karnataka Renukabala -
-
-
-
வறுத்த வேர்க்கடலை
#deepfryவேர்கடலையில் புரதங்கள், எண்ணெய் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்த அளவில் இருக்கிறது.நம் நாவின் சுவை மொட்டுகளுடன் சேர்த்து நம் உடலுக்கும் வேர்கடலை ஒரு விருந்து ஆகும்.பாலிபினால்கள், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பிற செயல்பாட்டு சேர்மங்களும் இந்த மொறுமொறுப்பான கொட்டைகளில் உள்ளது. Shyamala Senthil -
-
-
அவல் ஃப்ரைட் ரைஸ் (poha fried rice recipe in Tamil)
#pj இதில் நிறைய காய்கறிகள் சேர்த்து உள்ளேன்.. இது குழந்தைகளுக்கு கொடுக்க சத்தான ப்ரைட் ரைஸும் கூட.. Muniswari G -
மலபார் அவியல் (Malabar aviyal recipe in tamil)
#keralaகேரளா என்றாலே இயற்கை அழகிற்கும்,நீர் வளத்திர்க்கும்,பேசும் மதுரமான கேரள பாசைக்கும்,சுவையான சத்தான,மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது அங்கு வாழும் மக்கள் பழக மிக இணியமையானவர்கள்.மேலும் அங்கு பட்டை லவங்கம் போன்ற மசாலா பொருட்கள் மிகவும் தரமானது,மற்றும் விலை மலிவானது.ஒவ்வொருவர் வீட்டிலும் தென்னை, பலா, வாழை போன்ற மரங்கள் கட்டாயமாக வளர்க்க படும்.நேந்திரம் மற்றும் மரவள்ளி கிழங்கு மிகவும் பிரசிததமானது.இவர்கள் உணவு வகைகள் பெரும்பாலும் எல்லா காய்கறிகள் கொண்டு செய்ததாக இருக்கும்.பெரும்பாலும் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவார்கள்.உணவில் தேங்காய் இன்றியமயாததாகும்.இன்று காய்கறிகள் கொண்டு செய்யபடும் மலபார் அவியல் செய்தேன்.மிகவும் பிடித்தது. Meena Ramesh -
மேக்ரோனி மசாலா. #kids3#lunchboxrecipes
குழந்தைகளுக்கு பிடித்த மேக்ரோனி பாஸ்தா , அவர்களுக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்து சுவையான சத்தான மேக்ரோனி செய்து கொடுக்கலாம். Santhi Murukan -
துவரம் பருப்பு, முருங்கை கீரை குழம்பு #book #nutrient3
துவரம் பருப்பபில் நார் சத்தும், முருங்கை கீரையில் இரும்பு சத்தும் உள்ளது. Renukabala -
-
முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)
#Jan2#week2#கீரை வகை உணவுகள் Shyamala Senthil
More Recipes
கமெண்ட் (5)