துவரம் பருப்பு சாதம் (toor dal rice recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#made4
இது திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... இதில் முருங்கைக் கீரையும் சேர்த்து செய்துள்ளதால் இது மிகவும் சத்தானதும் கூட..

துவரம் பருப்பு சாதம் (toor dal rice recipe in tamil)

#made4
இது திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... இதில் முருங்கைக் கீரையும் சேர்த்து செய்துள்ளதால் இது மிகவும் சத்தானதும் கூட..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 1 1/2கப் அரிசி
  2. 3/4கப் துவரம் பருப்பு
  3. 1/4கப் தேங்காய் துருவல்
  4. 1ஸ்பூன் மஞ்சள்தூள்
  5. 2ஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1/2ஸ்பூன் பெருங்காயத்தூள்
  7. 4 1/2கப் தண்ணீர்
  8. 3/4கப் சாம்பார் வெங்காயம்
  9. 1/4கப் பூண்டு
  10. 1ஸ்பூன் சீரகம்
  11. 1நெல்லிக்காய் அளவு புளி
  12. தேவையானஅளவு உப்பு
  13. சிறிதளவுவடகம்
  14. 1ஸ்பூன் கடுகு
  15. 1கொத்து கறிவேப்பிலை
  16. 4ஸ்பூன் நல்லெண்ணெய்
  17. 1கப் முருங்கை கீரை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பை சேர்த்து அரை பதம் வேகும் வரை வேக வைத்துக் கொள்ளவும்.. அத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயம், தேங்காய் துருவல், முருங்கைக்கீரை சேர்த்து கொதிக்க விடவும்.. எல்லாம் சேர்ந்து வெந்ததும் அதனுடன் அரிசியும் சேர்த்து வேக வைக்கவும்...

  2. 2

    மிக்ஸி ஜாரில் அரைக் கப் வெங்காயம், பூண்டு, சீரகம் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    புளியை கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.. அதனுடன் அரைத்த விழுது மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்

  4. 4

    முக்கால் பதம் சாதம் வெந்ததும் அதனுடன் கரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கொதிக்க விடவும்... எல்லாம் ஒன்றாக சேர்ந்து வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்

  5. 5

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கருவேப்பிலை, வடகம் சேர்த்து தாளிக்கவும்... வெங்காயத்தையும் வதக்கி கொள்ளவும்.. தாளித்தவற்றை சாதத்துடன் சேர்த்து கிளறினால் துவரம்பருப்பு சாதம் தயார்

  6. 6

    சுவையான சத்தான எளிதில் செய்யக்கூடிய துவரம் பருப்பு சாதம் தயார்.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes