உருளைக்கிழங்கு பொரியல்

Navas Banu
Navas Banu @cook_17950579

உருளைக்கிழங்கு பொரியல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 5மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு
  2. 1 கப்தேங்காய் துருவல்
  3. 1/4 டீ ஸ்பூன்மஞ்சள் தூள்
  4. 1 டீஸ்பூன்மிளகாய் தூள்
  5. 1/2 டீஸ்பூன்ஜீரகம்
  6. 5 அல்லிபூண்டு
  7. தாளிக்க
  8. 1/2 டீஸ்பூன்கடுகு
  9. 1/4 டீ ஸ்பூன்ஜீரகம்
  10. 1 தண்டுகறிவேப்பிலை
  11. 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கழுவிக் கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஜீரகம், பூண்டு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

  3. 3

    கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, ஜீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து விட்டு, நறுக்கிக் கழுவி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    அடி பிடித்து விடாமல் இருக்க லேசாக தண்ணீர் தெளித்து தேவைக்கு உப்பும் சேர்த்து கிளறி மூடி வைத்து மீடியம் ஃப்ளேமில் வேக வைக்கவும்.

  5. 5

    உருளைக்கிழங்கு வெந்ததும் அரைத்த அரைப்பை சேர்த்து நன்றாக மிக்ஸ பண்ணி கிளறி விடவும்.

  6. 6

    பச்சை மணம் நீங்கியதும் இறக்கவும்.

  7. 7

    சுவையான உருளைக்கிழங்கு பொரியல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes