*ஹெல்தி,வெஜ், தாளக குழம்பு*(திருநெல்வேலி ஸ்பெஷல்)*(veg thalaga kulambu recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#HJ
திருவாதிரை அன்று செய்யும் ரெசிபி. இதில் காய்கறிகள் அதிகம் சேர்த்து செய்வதால் ஆரோக்கியம் நிறைந்தது.

*ஹெல்தி,வெஜ், தாளக குழம்பு*(திருநெல்வேலி ஸ்பெஷல்)*(veg thalaga kulambu recipe in tamil)

#HJ
திருவாதிரை அன்று செய்யும் ரெசிபி. இதில் காய்கறிகள் அதிகம் சேர்த்து செய்வதால் ஆரோக்கியம் நிறைந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
8 பேர்
  1. 2மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு
  2. 12பீன்ஸ்
  3. 1 மீடியம் சைஸ்சௌசௌ
  4. 2பெரிய சைஸ் கேரட்
  5. 1/2 பீஸ்பூசணிக்காய்
  6. 1வாழைக்காய் மீடியம் சைஸ்
  7. 1/4 கப்ப.பட்டாணி
  8. எலுமிச்சை அளவுபுளி
  9. 2 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  10. வறுக்க :-
  11. 1/2 ஸ்பூன்அரிசி
  12. 1/2 ஸ்பூன்கறுப்பு எள்
  13. 1 ஸ்பூன்க.பருப்பு
  14. 1 ஸ்பூன்உ.பருப்பு
  15. 1டீ ஸ்பூன்வெந்தயம்
  16. 10சி.மிளகாய்
  17. 2 டேபிள் ஸ்பூன்தேங்காய் துண்டுகள்
  18. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  19. 1 ஸ்பூன்எண்ணெய்
  20. தாளிக்க:-
  21. 1 டீ ஸ்பூன்கடுகு
  22. 2 டேபிள் ஸ்பூன்தேங்காய் துருவல்
  23. 2 ஸ்பூன்தே.எண்ணெய்
  24. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  25. ருசிக்குஉப்பு
  26. சிறிதளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்கறிகளை சுத்தம் செய்து சற்று பெரியதாக துண்டுகளாக நறுக்கவும். தேங்காயை துருவி,துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பை சிறு தீயில் வைத்து, வெறும் கடாயில், அரிசி, எள்ளை கருகாமல் நன்கு வறுத்து தட்டில் ஆற விடவும்.

  3. 3

    கடாயில், 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெந்தயம், க.பருப்பு, உ.பருப்பு, மிளகாய், தேங்காய் துண்டுகள், கறிவேப்பிலையை கருகாமல், சிவக்க வறுத்து தட்டில் போட்டு, அனைத்தையும் சேர்த்து, ஆறவிடவும்.

  4. 4

    புளியை ஊற வைத்து பின் நன்கு கரைத்து வடிகட்டவும்.

  5. 5

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், நறுக்கின காய்கறிகள், பட்டாணி, ம.தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து, குழையாமல், வேகவிட்டதும், புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

  6. 6

    வறுத்து ஆற விட்டதை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு மைய அரைக்கவும்.

  7. 7

    அரைத்த விழுதை பாதி வெந்த காய்கறியில் போட்டு கொதிக்க விடவும்.

  8. 8

    அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில், தே.எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, போட்டு வெடித்ததும், துருவிய தேங்காய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், சேர்த்து, தாளிக்கவும்.

  9. 9

    அனைத்தும் ஒன்று சேர கொதித்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.

  10. 10

    பிறகு தாளித்ததை, காய்கறி வெந்து கொதித்ததில் போடவும்.

  11. 11

    பிறகு பௌலுக்கு மாற்றவும்.

  12. 12

    இப்போது, சுவையான,*டேஸ்டி, வெஜ், தாளக குழம்பு*தயார். செய்து பார்த்து அசத்தி என்ஜாய் செய்யவும்.

  13. 13

    குறிப்பு:- இது திருநெல்வேலி ஸ்பெஷல் ஆகும். இந்த குழம்பில் துவரம் பருப்பு வேக விட்டு சேர்க்கவில்லை. மேலும், கறுப்பு எள் வறுத்தும், தே.எண்ணெய் சேர்த்தும், செய்ததால் கூடுதல் சுவை. கண்டிப்பாக செய்து பார்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes