சோயா மீல் மேக்கர் வறுவல்

Navas Banu
Navas Banu @cook_17950579
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100 கிராம்மீல் மேக்கர்
  2. 1/4 டீஸ்பூன்மஞ்சள் பொடி
  3. 1 ஸ்பூன்மிளகாய் பொடி
  4. 1 ஸ்பூன்சோம்பு பொடி
  5. 1 ஸ்பூன்கரம் மசாலா பொடி
  6. 1/2 டீஸ்பூன்பெப்பர் பொடி
  7. தேவையான அளவுஉப்பு
  8. 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  9. கொஞ்சம்கறிவேப்பிலை
  10. 3 டேபிள் ஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மீல் மேக்கரை 15 நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு ஊற வைக்கவும்.

  2. 2

    ஊறிய மீல் மேக்கரை கைகளால் நன்கு இறுக்கமாக தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுக்கவும்.

  3. 3

    பிழிந்த மீல் மேக்கரை மூன்று துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

  4. 4

    கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  5. 5

    இஞ்சி பூண்டு விழுது வதங்கியதும், மஞ்சள், மிளகாய், சோம்பு, கரம் மசாலா, பெப்பர் பொடிகளை சேர்த்து வதக்கவும்.

  6. 6

    மஸாலா நன்கு வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  7. 7

    கறிவேப்பிலை வதங்கியதும் மீல் மேக்கரை சேர்த்து, தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

  8. 8

    5 நிமிடம் நன்றாக கிளறி ட்ரை ஆனதும் இறக்கவும்.

  9. 9

    சுவையான மீல் மேக்கர் வறுவல் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes