கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

# பால்
இந்த கஸ்டர்ட் செய்முறை வேறுபட்டது கஸ்டர்ட் பவுடரை பயன்படுத்தாமல் முட்டையை பயன்படுத்தி செய்வது
இதை வெவ்வேறு விதமாக பரிமாறலாம் பார்ட்டிகளில் செய்ய ஏற்றது

கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)

# பால்
இந்த கஸ்டர்ட் செய்முறை வேறுபட்டது கஸ்டர்ட் பவுடரை பயன்படுத்தாமல் முட்டையை பயன்படுத்தி செய்வது
இதை வெவ்வேறு விதமாக பரிமாறலாம் பார்ட்டிகளில் செய்ய ஏற்றது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

12 பரிமாறுவது
  1. 4 முட்டை
  2. 2 கப் சர்க்கரை
  3. 1 கப் பால்
  4. 200 கிராம் ப்ரஷ் க்ரீம்
  5. 1 ஸ்பூன் ஜெலட்டின்
  6. 1 ஸ்பூன் பாதாம் எசென்ஸ் கலருடன் உள்ளது
  7. 1 ஸ்பூன் ரோஸ் எசென்ஸ் கலருடன் உள்ளது
  8. ஜெல்லி செய்ய:
  9. 1 பாக்கெட் ஆரஞ்சு ஜெல்லி கிறிஸ்டல்
  10. 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  11. 2 கப் தண்ணீர்
  12. அலங்கரிக்க:
  13. 1/2 கிலோ ஸ்பான்ஞ் கேக்
  14. ரசகுல்லா சிறிது
  15. சிரப் செய்ய:
  16. 1/4 கப் சர்க்கரை
  17. 6டேபிள்ஸ்பூன் தண்ணீர்
  18. 1 ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    1/4 கப் வெதுவெதுப்பான நீரில் ஜெலட்டின் ஐ ஊறவிட்டு பின் டபுள்பாயில் முறையில் கரைத்து வைக்கவும்

  2. 2

    முட்டையின் மஞ்சள் கரு மட்டும் தனியா பிரித்து எடுக்கவும்

  3. 3

    அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதனுள் மஞ்சள் முட்டையை வைத்து சிறிது சிறிதாக சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்

  4. 4

    பின் சிறிது சிறிதாக பால் விட்டு நன்கு கிளறவும்

  5. 5

    கரண்டியின் அடியில் ஒட்டினால் பதம்

  6. 6

    பின் ஆறியதும் தனியாக பீட் செய்த ப்ரஷ் க்ரீம் ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  7. 7

    பின் இதை இரண்டாக பிரித்து ஒன்றில் பாதாம் எசென்ஸ் மற்றொன்றில் ரோஸ் எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொண்டு பிரிட்ஜில் அரைமணி நேரம் வைக்கவும்

  8. 8

    வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு ஆரஞ்சு ஜெல்லி கிறிஸ்டல் முழுவதும் போட்டு சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் வரை கொதிக்க விட்டு இறக்கி ஆறவைக்கவும்

  9. 9

    சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு காபி பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  10. 10

    கேக் ஐ சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்

  11. 11

    இவ்வாறு கஸ்டர்ட்,சிரப்,ஜெல்லி, கேக், அனைத்தும் ரெடி செய்து கொள்ளவும்

  12. 12

    முதலில் பவ்லில் கேக் துண்டுகளை அடுக்கவும்

  13. 13

    பின் காஃபி சிரப் ஐ பரவலாக ஊற்றவும்

  14. 14

    பின் ரோஸ் கலர் கஸ்டர்ட் ஐ பரவலாக ஊற்றவும்

  15. 15

    பின் மீண்டும் கேக் துண்டுகளை அடுக்கவும்

  16. 16

    மறுபடியும் காஃபி சிரப் ஐ ஊற்றவும்

  17. 17

    பின் பாதாம் கஸ்டர்ட் ஐ பரவலாக ஊற்றவும்

  18. 18

    காஃபி சிரப் ஐ ஊற்றவும்

  19. 19

    அதன் மேல் பாதி செட்டான ஜெல்லி ஐ ஊற்றவும்

  20. 20

    பின் ரசகுல்லா வை வைத்து அலங்கரிக்கவும்

  21. 21

    பின் இதை ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வரை குளிரவிட்டு பரிமாறவும்

  22. 22

    சுவையான கஸ்டர்ட் கேக் புட்டிங் ரெடி இதை சின்ன சின்ன பவ்லில் இதே போல் லேயர் லேயராக நிரப்பி செட் செய்து பார்ட்டியில் அசத்தலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes