சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)

சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கேக் செய்ய
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக அளந்து எடுத்து வைக்கவும் சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்
- 2
மைதா உடன் பேக்கிங் பவுடர் கோகோ தூள் சேர்த்து மூன்று முறை நன்றாக ஜலித்து கொள்ளவும்
- 3
கேக் ஜெல் உடன் 3 டேபிள்ஸ்பூன் வெதுவெதுப்பான நீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்
காஃபி பவுடர் உடன் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்
- 4
முட்டையை உடைத்து ஊற்றி பீட் செய்யவும்
- 5
பின் சாக்லேட் எசென்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்யவும் பின் பொடித்த சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 6
சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து முட்டை உடன் நன்றாக 15 நிமிடங்கள் வரை பீட் செய்யவும்
- 7
பின் கரைத்துக் வைத்துள்ள கேக் ஜெல்லை சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 8
பின் காஃபி டிகாஷன் சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 9
எல்லாமே சேர்ந்து ரிப்பன் பதத்தில் வரும் வரை நன்றாக பீட் செய்து கொள்ளவும் பின் பீட்டரை நிறுத்தி விட்டு கரண்டியால் கலந்து கொள்ளவும்
ஓவனை 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வரை சூடாக்கவும்
- 10
பின் ஜலித்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக தூவி கலந்து கொள்ளவும்
காற்றுக்குமிழிகள் வெளியேறாதவாறு ஒரு புறமாகவே கலந்து கொள்ளவும்
- 11
கடைசியாக எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 12
பின் பட்டர் தடவி பட்டர் பேப்பர் விரித்து ரெடியாக உள்ள ட்ரேயில் ஊற்றவும்
பின் சமமாக தட்டி விடவும்
- 13
மீதமுள்ள மாவை சின்னச் சின்ன கப்பில் கப் கேக் ஆக ஊற்றி கொள்ளவும்
பின் சூடான ஓவனில் உள்ளே வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்
- 14
பின் 30 நிமிடங்கள் கழித்து 5 நிமிடங்கள் வரை அந்த சூட்டிலே வைத்து பின் வெளியே எடுத்து ஆறவிடவும்
- 15
சற்று ஆறியதும் ட்ரேயில் இருந்து வெளியே எடுத்து கவிழ்த்து பட்டர் பேப்பரை உரித்து வைக்கவும்
- 16
நல்ல மெதுமெதுப்பான கேக் ரெடி இதை 2 மணி நேரம் வரை நன்றாக ஆறவிடவும்
- 17
சாக்லேட் ட்ரபுள் செய்ய:
ப்ரஷ் க்ரீம் ஐ பேனில் ஊற்றி கொதிக்க விடவும்
- 18
கொதித்ததும் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் சாக்லேட் சிப்ஸ் நன்றாக கரைந்ததும் பால் சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 19
பின் பட்டர் சேர்த்து கலந்து இறக்கி ஆறவிடவும்
- 20
க்ரீம் செய்ய ஐஸ்கட்டி மேல் விப்டு க்ரீம் பவுடர் ஐ கொட்டவும் பின் நல்ல பிரிட்ஜில் வைத்து குளிரவிட்ட ஜில் பாலை ஊற்றவும் பீட்டர் கம்பியையும் நன்கு பிரிட்ஜில் வைத்து ஜில்லென்று எடுத்து பீட் செய்யவும்
- 21
8 நிமிடங்கள் வரை மீடியம் ஸ்பீடில் பீட் செய்யவும் இந்த பதத்தில் பீட் செய்து பிரிட்ஜில் 2 மணி நேரம் வரை வைக்கவும்
சாக்லேட் சிரப் செய்ய தண்ணீர் உடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும் பாகு எல்லாம் வேண்டாம் சர்க்கரை கரைந்தால் போதும் காஃபி டிகாஷன் மற்றும் சாக்லேட் எசென்ஸ் சேர்த்து கலந்து இறக்கி ஆறவிடவும்
- 22
பின் ஆறவைத்த கேக் ஐ கட் செய்து கொள்ளவும் பின் ஒரு லேயர் கேக் மேல் சாக்லேட் சிரப் ஐ ஊற்றவும்
- 23
பின் ரெடியாக உள்ள க்ரீம் ஐ கேக் மேற்புறம் மட்டும் தடவவும் பின் ரெடியாக உள்ள சாக்லேட் ட்ரபுளை ஊற்றவும் பின் அடுத்த லேயர் கேக் ஐ வைக்கவும்
- 24
ரவுண்ட் ட்ரேயில் செய்த நடுவில் குழி உள்ள கேக் ஃபீஸ் ஐ வைக்கவும் பின் அதன் மேல் சாக்லேட் சிரப் ஐ ஊற்றவும்
அந்த குழியில் ஜெம்ஸ் டைரி மில்க் சாட்ஸ் ஐ கொட்டவும்
- 25
பின் க்ரீம் கொண்டு தடவவும் பின் அடுத்த லேயர் கேக் ஐ வைக்கவும் பின் அதன் மேல் சாக்லேட் சிரப் ஐ ஊற்றவும்
- 26
பின் கேக் மேற்புறம் மட்டும் சைடு முழுவதும் க்ரீம் ஐ தடவவும்
மீதியுள்ள கேக் (குழி உள்ள ஃபீஸ்) உடன் சாக்லேட் ட்ரபுள் 4 டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும் உதிர் உதிரான கேக் க்ரம்ஸ் ரெடி
- 27
கேக் க்ரம்ஸ் ஐ பரவலாக கேக் முழுவதும் தூவி விடவும்
- 28
பின் இதை பிரிட்ஜில் 2 மணி நேரம் வரை வைத்து செட் செய்து கொள்ளவும்
சுவையான ஆரோக்கியமான சாக்லேட் ட்ரபுள் கேக் ரெடி
நீங்களும் இதை செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
-
-
-
-
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
சாக்லேட் ட்ரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)
சிறு முயற்சி....சுவை அதிகம்,செய்முறை எளிதெயெனினும்,மெனக்கெடல் அதிகம். Ananthi @ Crazy Cookie -
சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)
#GA4 #Week10 #Chocolate Renukabala -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)
இந்த வகை கேக் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். ஆனால் சுவை சூப்பர்.நான் சிறிய கேக் தான் செய்தேன். மிக அருமையாக இருக்கிறது என்று வீட்டில் பாராட்டு வேறு. நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள். punitha ravikumar -
-
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)
# பால்இந்த கஸ்டர்ட் செய்முறை வேறுபட்டது கஸ்டர்ட் பவுடரை பயன்படுத்தாமல் முட்டையை பயன்படுத்தி செய்வதுஇதை வெவ்வேறு விதமாக பரிமாறலாம் பார்ட்டிகளில் செய்ய ஏற்றது Sudha Rani -
More Recipes
கமெண்ட்