சுரைக்காய் மசாலா சாதம் (Suraikkai Masala Recipe in Tamil)

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
Chennai

#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள்
துருவிய சுரைக்காய் சேர்த்து செய்யும் வித்தியாசமான சாதம்.சுரைக்காய் சேர்த்திருப்பதே சுவையில் தெரியாததால் காய் சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சுரைக்காய் மசாலா சாதம் (Suraikkai Masala Recipe in Tamil)

#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள்
துருவிய சுரைக்காய் சேர்த்து செய்யும் வித்தியாசமான சாதம்.சுரைக்காய் சேர்த்திருப்பதே சுவையில் தெரியாததால் காய் சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 2 கப் துருவிய சுரைக்காய்
  2. 1 கப் உதிராக வடித்த சாதம்
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  5. தேவையான அளவு உப்பு
  6. 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி
  7. 4 முந்திரி பருப்பு
  8. 1 டீஸ்பூன் சீரகம்
  9. 1 ஆர்க்கு கொத்தமல்லி இலை
  10. அரைத்து கொள்ள:
  11. 1 தக்காளி
  12. 2 பச்சை மிளகாய்
  13. 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  14. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், முந்திரி தாளித்து வெங்காயம் மற்றும் துருவிய சுரைக்காய் சேர்த்து வதக்கவும்

  2. 2

    அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்

  3. 3

    வெங்காயம்,சுரைக்காய் வதங்கியதும் அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    பின்னர் வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்

  5. 5

    கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
அன்று
Chennai
Iam passionate about cooking traditional and healthy receipes. I like to try innovative receipes.
மேலும் படிக்க

Similar Recipes