பஞ்சாபி சிக்கன் கறி (Punjabi Chicken curry Recipe in Tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

அசைவ உணவு வகைகள்

பஞ்சாபி சிக்கன் கறி (Punjabi Chicken curry Recipe in Tamil)

அசைவ உணவு வகைகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 500 கிராம்சிக்கன்
  2. 2மீடியம் சைஸ் வெங்காயம் நறுக்கியது -
  3. 1பெரிய தக்காளி - (மிக்ஸியில் அடித்து வைத்துக் கொள்ளவும்)
  4. 2 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  5. 1 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள்
  6. 1 டேபிள் ஸ்பூன்காஷ்மீர் மிளகாய் தூள்
  7. தேவைக்குஉப்பு
  8. 1 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  9. 1 டீஸ்பூன்கஸுரி மெத்தி
  10. 1 டீஸ்பூன்கரம் மசாலா தூள்
  11. 3 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  12. பஞ்சாபி மசாலா
  13. 1 டேபிள் ஸ்பூன்முழு மல்லி
  14. 1 டேபிள் ஸ்பூன்பெருஞ்சீரகம்
  15. 1 டீஸ்பூன் கடுகு - (இவை மூன்றையும் வறுத்து பொடித்துக் கொள்ளவும்)

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.

  2. 2

    எண்ணெய் சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    வெங்காயத்துடன் சிக்கனை சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    இதனுடன் இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து பச்சை வாசனை மாறும் வரை நன்றாக வதக்கவும்.

  5. 5

    இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், அடித்து வைத்திருக்கும் தக்காளி எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி வதக்கவும்.

  6. 6

    கடாயை மூடி வைத்து ஐந்து நிமிடம் வேக விடவும்.

  7. 7

    ஐந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து அரை கப் சூடு தண்ணீர் விட்டு மிக்ஸ் பண்ணி கோழி வேகும் வரை மூடி வைக்கவும்.

  8. 8

    இதனுடன் கஸுரி மெத்தி, கரம் மசாலா தூள், வறுத்து பொடித்து வைத்திருக்கும் பஞ்சாபி மசாலா இவை மூன்றையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி மூடி வைத்து இரண்டு நிமிடம் வேக விடவும்.

  9. 9

    தண்ணீர் வற்றி மசாலாக் கோழியில் பொதிந்து வரும் போது மல்லித்தழை தூவி இறக்கவும் ‌.

  10. 10

    அருமையான சுவையில் பஞ்சாபி சிக்கன் கறி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes