சேமியா இன்ஸ்டன்ட் இட்லி/semiya instant idly 😋😋

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#இட்லி
#கோல்டன் அப்ரோன் 3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45Mins
2 பரிமாறுவது
  1. ரோஸ்டெட் சேமியா 2 கப்
  2. தயிர் 1 கப்
  3. பச்சை மிளகாய் 2
  4. இஞ்சி 1 துண்டு
  5. கொத்தமல்லி தழை
  6. கேரட்
  7. உப்பு
  8. நெய் 1 டீஸ்பூன்
  9. தாளிக்க
  10. ஆயில் 2 டேபிள் ஸ்பூன்
  11. கடுகு 1 டீஸ்பூன்
  12. கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  13. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

45Mins
  1. 1

    ரோஸ்டெட் சேமியா 2 கப் எடுத்து வைக்கவும்.கெட்டி தயிர் 1 கப் எடுத்து வைக்கவும்.கேரட் 1 தோல் சீவி கழுவி துருவி வைக்கவும்.இஞ்சி 1 துண்டு தோல் சீவி துருவி வைக்கவும்.பச்சை மிளகாய் 2 விதை நீக்கி சிறியதாக நறுக்கி வைக்கவும்.கொத்தமல்லி தழை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.கருவேப்பிலை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

  2. 2

    கடாயில் ஆயில் 2 டேபிள் ஸ்பூன் விட்டு கடுகு 1 டீஸ்பூன், கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை நறுக்கியது, ரோஸ்டெட் சேமியா சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.ஆற விடவும்.தயிரில் துருவிய கேரட், துருவிய இஞ்சி,நறுக்கிய பச்சை மிளகாய்,உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.இந்த தயிரில் ஆறவிட்ட வறுத்த ரோஸ்டெட் சேமியா நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கலக்கி விடவும்.10 முதல் 15 நிமிடம் மூடி வைக்கவும்.

  3. 3

    15 நிமிடம் கழித்து இட்லி தட்டில் நெய் தடவிய சேமியா கலவையை இட்லியாக ஊற்றவும்.15 நிமிடம் இட்லி தட்டில் ஆவியில் வேக விடவும்.10 நிமிடம் கழித்து ஆற விட்டு இட்லி தட்டிலிருந்து எடுக்கவும்.தயிர்,சட்னி,சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். சுவையான ரோஸ்டெட் சேமியா இட்லி ரெடி.😋😋

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes