மெது பக்கோடா/பட்டணம் பக்கோடா

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#lockdown
எப்ப கடையில டீ குடித்தாலும் இந்த பக்கோடா பார்க்கும்போது சாப்பிடணும் உடனே தோணும். lockdown நேரத்தில் டீக்கடையை மிஸ் பண்ணும் அனைவருக்கும் இந்த ரெசிபி சமர்ப்பணம்.😉

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் கடலை மாவு
  2. 3/4 கப் அரிசி மாவு
  3. 2டேபிள்ஸ்பூன் வெண்ணெய்
  4. 1 சிட்டிகை பேக்கிங் சோடா
  5. 1 வெங்காயம் பொடியாக நறுக்கிய
  6. 2 பச்சை மிளகாய்
  7. 2 துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. சிறிது பெருங்காயம்
  10. நறுக்கிய கருவேப்பிலை
  11. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வெண்ணெயில் ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து கைவிடாமல் 5 நிமிடம் நன்கு அடித்துக் கொள்ளவும்.

  2. 2

    அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,தேவைக்கேற்ப உப்பு,பெருங்காயம்,கடலை மாவு,அரிசி மாவு, மற்றும் கருவேப்பிலை சேர்த்து பிசையவும்.ஒரு கை தண்ணீர் தெளித்து பிசைந்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் சூடு ஏறியதும் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். வெளியில் கிரிஸ்பி ஆகவும் உள்ளே மெதுவாகவும் இருக்கும் சூப்பரான மெது பக்கோடா ரெடி.

  4. 4

    தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

  5. 5

    டீக்கடையில் இதில் டால்டா சேர்த்து செய்வர். டால்டா உடம்புக்கு கேடு விளைவிப்பதால் நான் இதில் வெண்ணெய் சேர்த்து செய்துள்ளேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes