அரைக்கீரை கடையல்

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

# book. எதிர்ப்பு சக்தி உணவுகள்
கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. வாரத்தில் இரு முறையாவது நம் உணவில் கீரை அவசியம் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அரைக்கீரை அரைக் கட்டு
  2. சின்ன வெங்காயம் 10
  3. வர மிளகாய் 4
  4. தக்காளி 2 மிளகு 4
  5. உப்பு-தேவைக்கேற்ப மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை
  6. தாளிப்பதற்கு ஆயில்
  7. பூண்டு ஆறு பல்
  8. கடுகு உளுந்து வடகம்
  9. புளி ஒரு சிறு நெல்லிக்காயளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரைக் கீரையை ஆய்ந்து நன்கு அலசி நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டவும். சின்ன வெங்காயம் உரித்து கழுவி வைக்கவும் தக்காளி கழுவி பொடியாக அரிந்து வைக்கவும் ஒரு வாணலியில் சுத்தம் செய்த கீரை வெங்காயம் தக்காளி 3 மிளகாய் உப்பு சிறிதளவு மஞ்சள்தூள் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். புளியை ஊறவைத்து கரைத்து வைக்கவும். வேக வைத்த கீரையை ஆறவைக்கவும்

  2. 2

    மிக்ஸி ஜாரில் ஆறவைத்த கீரை கலவையை நான்கு மிளகு சேர்த்து மைய அரைக்கவும். பாத்திரத்தில் மாற்றி கரைத்து வைத்த புளி தண்ணீருடன் கலக்கவும்

  3. 3

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து ஒரு வர மிளகாய் நசுக்கிய பூண்டு போட்டு தாளித்து கொட்டவும். உளுந்து வடகம் நம் வீட்டில் இருந்தால் சிறிது எண்ணெயில் வறுத்து கொட்டலாம். கீரையை நன்கு கலந்து விடவும். சுவையான அரைக் கீரை புளி சேர்த்த கடையல் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes