மொச்சை பருப்பு சாம்பார்

ஜெயக்குமார்
ஜெயக்குமார் @cook_24286848

#சாம்பார் இந்த சாம்பார் மொச்சைப் பயறை ஊற வைத்து பருப்பை தனியாக எடுத்து செய்வது மதுரை பக்கம் உள்ள கிராமங்களில் கோவில் திருவிழா காலங்களிலும் தமிழ் மாதப்பிறப்பு அன்று மற்றும் நல்ல நாள் பெரிய நாளன்றும் செய்யும் குழம்பு வகை சாம்பார் இதை கூட்டாகவும் செய்வோம் திரும்பவும் தாளித்து வைப்போம் இந்த சாம்பார் மிகவும் உடலுக்கு நல்லது நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கக் கூடியது எலும்புக்கு வலு சேர்க்கும் சளித்தொல்லை நீங்கும் உடல் காயம் பட்ட அசைவம் சாப்பிடுவதற்கு பதில் இந்த குழம்பை சார் வைத்து குடிக்கலாம் அசைவம் கிடைப்பதற்கு உண்டானது இந்த மொச்சை பருப்பில் உண்டுஉண்டு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நி
5 பரிமாறுவது
  1. மொச்சைப் பயறு ஒரு கப்
  2. தக்காளி-3
  3. வெங்காயம் ஒன்று
  4. பச்சை மிளகாய் 5
  5. கறிவேப்பிலை மல்லி
  6. கடுகு சோம்பு தாளிக்க
  7. சோம்புத்தூள் மிளகுத்தூள் சீரகத்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தள் மஞ்சள் தூள் தலா ஒரு ஸ்பூன்
  8. தேங்காய் பூண்டு சின்ன வெங்காயம் அரைக்க
  9. கத்தரிக்காய் மூன்று முருங்கைக்காய் ஒன்று நறுக்கியது
  10. எண்ணெய் உப்பு
  11. சிறிதுபுளி
  12. சாம்பார் பொடி ஒரு ஸ்பூன்
  13. பெருங்காயப் பொடி அரை ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30நி
  1. 1

    தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கி வைத்துக் கொள்ளவும் கத்தரிக்காய் முருங்கைக்காய் வெட்டி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    மொச்சை பயறை முதல் நாள் இரவே ஊறவைத்து தோலை பிரித்து எடுத்து பரப்பாக வைத்துக்கொள்ளவும்

  3. 3

    பூண்டு தேங்காய் வெங்காயம் குறிப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும் பிதுக்கு பருப்பு அரிசி கழுவிய நீரில் மஞ்சள்தூள் கலந்து வேக விடவும் விருப்பப்பட்டால் குக்கரில் ஒரு விசில் வைத்து எடுக்கவும் இது உரிய பயறு என்பதால் சீக்கிரம் வெந்துவிடும்

  4. 4

    தாளிக்க அடுப்பில் சட்டி வைத்து நல்லெண்ணெய் விட்டு கடுகு சோம்பு போட்டுத் தாளிக்கவும் அதில் பெருங்காயத்தூள் வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி கறிவேப்பிலை மல்லி சேர்த்து வதக்கி கத்திரிக்காய் முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும்

  5. 5

    வதங்கிய காய்கறியில் சீரகத்தூள் மிளகுத்தூள் மிளகாய்த்தூள் சாம்பார் தூள் உப்பு சேர்த்து வெந்த பருப்பையும் சேர்த்து வேகவிடவும் காய் நன்கு வெந்ததும் சிறிது புளி கரைத்து ஊற்றி எழுதுவதென்றால் சாம்பார் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க

  6. 6

    மசாலா வாசம் போனதும் இறக்கி வைத்து பரிமாறவும் சூடான சுவையான பிதுக்கு பருப்பு சாம்பார் தயார் இது ஒரு கிராமத்து சாம்பார் சுவையாக இருக்கும் சாதத்துக்கு மட்டுமல்ல இட்லி தோசை இடியாப்பம் உப்புமா இன்பங்களுக்கு ஏற்றவகை சாம்பார்

  7. 7

    செய்து சுவைத்துப் பார்த்து விட்டு கூறுங்கள் உங்கள் கருத்துக்களை

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ஜெயக்குமார்
அன்று

Similar Recipes