எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1-1/2 கப் மைதா
  2. 125 மிலி பால்
  3. 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  4. 2 டீஸ்பூன் ஈஸ்ட்
  5. 2 டேபிள்ஸ்பூன் மிருதுவான வெண்ணெய்
  6. 6 டேபிள்ஸ்பூன் ஜாம்
  7. 1 முட்டை மஞ்சள் கரு (அ) பால்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் சூடான பால் சர்க்கரை ஈஸ்ட் சேர்க்கவும்

  2. 2

    இந்த கலவையை 10 நிமிடம் மூடி வைக்கவும் பிறகு ஈஸ்ட் பொங்கி வந்தவுடன்

  3. 3

    ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு வெண்ணெய் சேர்க்கவும்

  4. 4

    இந்த கலவையை குறைந்தது 5 நிமிடம் கையில் மாவு ஒட்டாது வரை பிசைய வேண்டும் படத்தில் காட்டியவாறு அழுத்தி பார்க்கும்போது மிருதுவாக இருக்க வேண்டும் பிறகு இதில் எண்ணை தடவி காற்று புகாதவாறு மூடி வைக்கவும் இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும்

  5. 5

    மாவை இரண்டு மடங்காக பொங்கி வந்த பிறகு இதில் திரும்பவும் இரண்டு நிமிடம் பிசைந்து இரண்டு பங்காக பிரிக்கவும் ஒரு பங்கை சப்பாத்தி மாவு தேய்ப்பது போல் படத்தில் காட்டியவாறு தேய்த்துக் கொள்ளவும் பிறகு 4 பங்காக இதை பிடிக்கவும்

  6. 6

    ஒரு பங்கை எடுத்து படத்தில் காட்டியவாறு ஜாமை வைத்து மூடி சுற்றவும் (8 ஜாம் பன்னுகள் செய்யலாம்)

  7. 7

    இதேபோல் திரும்பவும் செய்ய

  8. 8

    பிறகு இதை கேக் டின் அல்லது தட்டில் எண்ணெய் தடவி இதை இடைவெளிவிட்டு படத்தில் காட்டியவாறு வைக்கவும் பிறகு இதன் மேல் முட்டையின் மஞ்சள் கரு அல்லது பால் தேய்த்து மூடி 15 நிமிடம் வைக்கவும் பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் உப்பு கொட்டி அதன் மேல் ஸ்டாண்ட் வைத்து 15 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும் பிறகு பன் தட்டை இதில் வைக்கவும்

  9. 9

    மிதமான தீயில் 15 நிமிடம் வைக்கவும் பிறகு திருப்பி போட்டு 5 நிமிடம் குறைந்த தீயில் வைத்து சூடாக இருக்கும்போதே வெண்ணை தடவி மூடி வைத்து 10 நிமிடம் கழித்து பரிமாறவும்

  10. 10

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சாம்பலை இனி வீட்டிலேயே சுலபமான முறையில் தயாரிக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes