முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)

Roobha
Roobha @cook_24931100

முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
  1. 2முள்ளங்கி
  2. 4 தேங்காய் பீஸ்
  3. 1/2 கப் வெள்ளை உளுந்து
  4. 3 காய்ந்த மிளகாய்
  5. 1/2 ஸ்பூன் உப்பு
  6. 2 பூண்டு பல்
  7. கருவேப்பிலை
  8. சிட்டிகை புளி
  9. தேவைக்கு தண்ணீர்
  10. 1ஸ்பூன் எண்ணெய்
  11. 1/2 ஸ்பூன் கடுகு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில்இரண்டு முள்ளங்கியை தோல் சீவி கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்பு முள்ளங்கியை துருவிசாறுபிழிந்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.சட்னிக்கு தேவையான உளுந்து காய்ந்த மிளகாய்தேங்காய் பூண்டுசிறிது புளிஎடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

  2. 2

    கடாயில்துருவிய முள்ளங்கி மிதமான தீயில் வைத்து இலேசாக சிவக்கும் வதக்க வேண்டும்.பின்பு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய்
    பூண்டு உளுந்து புளி சேர்த்து வதக்க வேண்டும்.

  3. 3

    மிக்ஸியில் தேங்காய் துண்டுகளை சேர்த்துபொடி செய்து கொள்ள வேண்டும்.
    பின்பு வதக்கிய அனைத்தையும்மற்றும் உப்பையும் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து கொட்ட வேண்டும்.

  4. 4

    இந்த சட்னி இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையான சத்தான முள்ளங்கி சட்னி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Roobha
Roobha @cook_24931100
அன்று

Similar Recipes