சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸியில் முட்டை, சர்க்கரை, தயிர் சேர்க்கவும்
- 2
இதனுடன் எண்ணெய் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்
- 3
அகலமான பாத்திரத்தில் சல்லடை வைத்து மைதா பேக்கிங் பவுடரை சலித்து எடுத்துக் கொள்ளவும்... தேசிக்கேட்டர் கோக்கனட் சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளவும்
- 4
முட்டை அரைத்த கலவையை, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்
- 5
கேக் டின்னில் எண்ணைய் தேய்த்து அதன் மேல் பட்டர் சீட்டை வைக்கவும், பிறகு தயாரித்து வைத்த கலவையை இதனுள் ஊற்றி காற்றுப் புகாதவாறு இரண்டு முறை தட்டி கொள்ளவும்
- 6
அகலமான பாத்திரத்தில் உப்பு கொட்டி அதன்மேல் ஸ்டாண்ட் வைத்து 15 நிமிடம் பிரீ ஹிட் செய்யவும்.., பிறகு இதனுள் கேக் டின் வைத்து காற்றுப் புகாதவாறு மூடி குறைந்த தீயில் 15 நிமிடம் வைக்கவும் பிறகு மிதமான தீயில் 50 நிமிடம் வைக்கவும் வெந்துவிட்டதா என்பதை அறிய ஒரு குச்சியால் கேக்கை குத்திப் பார்க்கவும் மாவு ஒட்டாமல் வந்தால் கேக் வெந்து விட்டது என்று அர்த்தம், மாவு ஓட்டினால் மீண்டும் மிதமான தீயில் 5 நிமிடம் வைக்கவும்
- 7
அட்டகாசமான தேங்காய் கேக் தயார் 😍😍😍 பரிமாறும் பொழுது இதன்மேல் தேசிக்கேட்டர் கோக்கனட் தூவி பரிமாறவும்
Similar Recipes
More Recipes
- சாமை தோசை (Saamai dosai recipe in tamil)
- சாமை தட்டுவடை (Saamai thattu vadai recipe in tamil)
- சாமை திரட்டுப்பால் வித் பொன்னிற அன்னாசிசாஸ்(Saamai thirattu paal with annaasi sauce recipe in tamil)
- சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)
- பீட்ரூட் கம்பு உருண்டை (Beetroot Kambu Urundai Recipe in Tamil)























கமெண்ட் (17)