பன்னீர் பட்டர் மசாலா(Paneer butter masala recipe in tamil)

பன்னீர் பட்டர் மசாலா(Paneer butter masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையானவற்றை எடுத்து பக்கத்தில் வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் பட்டர் விட்டு சின்ன வெங்காயம், தக்காளி,இஞ்சி, வெள்ளைப்பூண்டு, சீரகம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். முந்திரி பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும்
- 3
நன்றாக வதக்கி ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு கடாயில் 50 கிராம் பட்டர் விட்டு அரைத்து வைத்த வெங்காயம் தக்காளி பேஸ்ட் சேர்த்துக் கொள்ளவும்.சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 5
நன்றாக கொதித்த பின்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து மசாலா வாடை போகும் வரை நன்றாக கிளறிக் கொள்ளவும்.
- 6
பின்னர் நறுக்கி வைத்த பன்னீரை அதில் சேர்த்துக் கொள்ளவும்.
- 7
கிரேவி பதத்திற்கு வந்தவுடன் தேங்காய் பால் சிறிதளவு சேர்த்து மிதமான சூட்டில் ஒரு ஐந்து நிமிடம் வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 8
சுவையான பன்னீர் பட்டர் மசாலா ரெடி. சப்பாத்தி, தோசை வைத்து சாப்பிடலாம்
Similar Recipes
More Recipes













கமெண்ட்