காய்கறி கூட்டாஞ்சோறு (Kaaikari kootaansoru recipe in tamil)

அரிசி, பருப்பு 3பங்கு தண்ணீர் விட்டு அரவேக்காடு வேகவும். காய்கறிகள், கீரை அரைத்த கலவை,உப்பு போட்டு நன்றாக கலக்கவும். கலையக்கூடாது சாதம்.கடைசியில் கடுகு,உளுந்து, பெருங்காயம், வெந்தயம், பெருங்காயம்,கறிவேப்பிலை, தாளித்து போடவும். தொட்டுக்கொள்ள அப்பளம்,கோவக்காய் வத்தல்
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி 150கிராம் து.பருப்பு 50 கிராம் கொதிக்க விடவும்.தண்ணீர் 3பங்கு விடவும்
- 2
காய்கறி வெட்டவும்.சாதத்துடன் கலந்து வேகவிடவும். இப்போது உப்பு சாம்பார் பொடி 2ஸ்பூன் போடவும்
- 3
அரிசி அரை வேக்காடு வெந்தபின் கீரை சுத்தம் செய்துபோடவும்
- 4
தேங்காய் அரைத்து கலக்கவும்,சாம்பார் பொடி ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு போடவும்
- 5
கடுகு,உளுந்து, வெந்தயம்,வெங்காயம்,பெருங்காயம், கறிவேப்பிலை, வறுத்து போடவும்
- 6
சுவையான சாதம் தயார்
- 7
தொட்டுக்கொள்ள அப்பளம் கோவக்காய் வற்றல்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
அரிசி அரைத்த உப்புமா (Arisi araitha upma recipe in tamil)
அரிசி பருப்பு கலந்து ஊறப்போட்டு 4மணிநேரம் கழித்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுஅரைத்து கடுகு,உளுந்து, வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு வதக்கவும். பின் அரைத்த மாவைப் போட்டு 100மி.லி எண்ணெய் ஊற்றி கிண்டவும். உப்பு தேவையான அளவு போடவும். தேங்காய் கால் மூடி துருவி போடவும் ஒSubbulakshmi -
வடை மோர் குழம்பு(Vadai morkulambu recipe in tamil)
கலைப்பருப்பு 100ஊறப்போட்டு இஞ்சி சிறிது,2வரமிளகாய்,உப்பு, பெருங்காயத்தூள் சிறிது போட்டு உப்பு ,தேவையான அளவு,சீரகம், சோம்புபோட்டு குட்டி வடையாக போடவும்.மோர் 1டம்ளர் எடுக்க. கடலைப்பருப்பு,2ஸ்பூன்,து.பருப்பு 1ஸ்பூன்,அரிசி அரை ஸ்பூன் போட்டு ஊறவைத்து சீரகம் சிறிது,தேங்காய் கொஞ்சம், வெங்காயம் 3,பச்சை மிளகாய் 1 அரைத்து மோரில் கலக்கவும். பின் கடாயில் கடுகு, உளுந்து ,வெந்தயம் ,பெருங்காயம் ,வரமிளகாய் 2, வறுத்து பெரியவெங்காயம் வெட்டியதை வதக்கவும் வடைகளை போடவும்.அரைத்த கலவை மோர் ஊற்றி நுரை வரவும் இறக்கவும். மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
சட்னி (Chutney recipe in tamil)
தேங்காய், வரமிளகாய்5,புளி,உப்பு, பொட்டுக்கடலை, தக்காளி போட்டு அரைக்கவும். பின் வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் கடுகு,உளுந்து தாளித்து போடவும்சிவப்பு கலர் ஒSubbulakshmi -
மதிய உணவு சாதம்,சாம்பார், கருணைக்கிழங்கு மசியல், அரைக்கீரைப் பொரியல்
சாதம் வடிக்க.முருங்கை து.பருப்பு வேகவைத்து தக்காளி,வெங்காயம், ப.மிளகாய் சாம்பார் பொடி போட்டு உப்பு போட்டு கொதிக்க விட்டு கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து கலக்கவும். கீரை வெங்காயம் பொடியாக வெட்டி கடுகு ,உளுந்து ,தாளித்து ,வரமிளகாய் வறுத்து வெங்காயம் வதக்கவும். கீரை உப்பு சீரகம் போடவும்.கருணை வேகவைத்து தோல் உரித்து வெங்காயம் ,வரமிளகாய் ,கடுகு,பெருங்காயம் தாளித்து கிழங்கை பிசைந்து மிளகாய் பொடி,உப்பு, போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கிண்டவும் ஒSubbulakshmi -
முருங்கை பிரட்டல் (Murunkai pirattal recipe in tamil)
முருங்கை 5, பெரிய வெங்காயம் 2 தக்காளி 1 வெட்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து,கறிவேப்பிலை தாளித்து பெருங்காயம் ,உப்பு போட்டு வதக்கவும். பின் தண்ணீர் தெளித்து வேக விடவும் ஒSubbulakshmi -
வெந்தய தோசை நிலக்கடலை சட்னி காலை உணவு
அரிசி 1உழக்கு உளுந்து 50 வெந்தயம் 3ஸ்பூன் ஊறவைத்து முதல் நாள் ஊறவைத்து உப்பு போட்டு பிசைந்து மறுநாள் நெய்விட்டு தோசை சுடவும். தொட்டுக்கொள்ள நிலக்கடலை,தேங்காய், புளி,உப்பு, ப.மிளகாய் ,தண்ணீர் சேர்த்துஅரைத்து கடுகு, உளுந்து,பெருங்காயம் வறுத்து கலக்கவும். ஒSubbulakshmi -
கொத்தமல்லி சட்னி
தேங்காய், மல்லி இலை ,பொட்டுக்கடலை,ப.மிளகாய், உப்பு, புளி,தேவையான அளவு உப்பு போட்டு அரைத்து கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை, வெங்காயம் தாளித்து சேர்க்கவும் ஒSubbulakshmi -
அவியல் (Aviyal recipe in tamil)
கத்தரி,முருங்கை பீன்ஸ்,கேரட்,உருளை,சேனை,வாழை,சேம்பு வெள்ளை பூசணி,நீண்ட துண்டுகளாக வெட்டி கடலைப்பருப்பு கலந்து தேவையான உப்பு போட்டு வேகவிடவும். பச்சை மிளகாய் தேங்காய் ,அரைமூடி,சீரகம் பூண்டு ,அரைத்து காயில் கலக்கி பின் தயிர் ஊற்றி தேங்காய் எண்ணெயில் கடுகு ,உளுந்து #பொங்கல் ஸ்பெசல்.கறிவேப்பிலை தாளித்து காயில் சேர்க்கவும்.அருமையான அவியல் தயார். ஒSubbulakshmi -
கருணைக்கிழங்கு மசியல் (Karunaikilanku masiyal recipe in tamil)
கருணைக்கிழங்கு 4வேகவைத்து தோல் உரித்து பிசையவும். கடாயில் கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம் வறுத்து ப.மிளகாய் ,வெங்காயம் வதக்கவும். பின் கிழங்கு, புளித்தண்ணீர் ஊற்றி மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவும்மல்லி இலை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
சென்னை சமையல் சுண்டைக்காய் கூட்டு, பூண்டு கருுணைக்கிழங்கு புளிக்குழம்பு,சுகர் கீரைப் பொரியல்
கிழங்கு வேகவைக்கவும். தோல் உரிக்கவும்.பூண்டு வெங்காயம் பொடியாக வெட்டவும். சுண்டைக்காய் காம்பு நீக்கி பாசிப் பருப்பு ஒருகைப்பிடி, சிப்சச பச்சை மிளகாய் உப்பு போட்டு வேகவைக்கவும். புளித்தண்ணீர் கரைத்து கடுகு,உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு, தாளித்து மிளகாய் பொடி ,உப்பு,போட்டு கொதிக்க விடவும். பின் கருணைக்கிழங்கு வெட்டி கலந்து கொதிக்க விடவும். கீரை பொடியாக வெட்டி வெங்காயம் வெட்டி எண்ணெய் விட்டுவரமிளகாய், கடுகு,உளுந்து தாளித்து கீரையை கழுவி தாளித்து வேகவிடவும். சீரகம் போடவும். ஒSubbulakshmi -
துவரம்பருப்பு சாம்பார்(Sambar recipe in tamil)
துவரம்பருப்பு சாம்பார்.து.பருப்பு 100வேகவைக்கவும்.பெரிய நெல்லி அளவு புளி ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறப்போட்டு கரைக்கவும். காய்கள், வெங்காயம், ப.மிளகாய்,தக்காளி வெட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, இரண்டு வரமிளகாய் வறுத்து காய் வதக்கி சாம்பார் பொடி தேவையான உப்பு போட்டு கொதிக்க விட்டு பருப்பை போட்டு மீண்டும் கொதிக்க விடவும். மல்லி இலை போட்டு இறக்கவும்.பருப்பு ஸ்பெசல் ஒSubbulakshmi -
கத்தரி தக்காளி கிரேவி (Kathri thakkali gravy recipe in tamil)
கத்தரி,தக்காளி, வெங்காயம், பூண்டு வெட்டவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை ,பெருங்காயம் தாளித்து பின் தக்காளி, வெங்காயம்,கத்தரிக்காய் ,மிளகாய் பொடி உப்பு போட்டு வதக்கவும். இதனுடன் சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு,உளுந்து, பெருங்காயம்,போட்டு வதக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடிவைக்கவும்.வேகவும் இறக்கி கொத்தமல்லி போட்டு இறக்கவும். அருமையான கிரேவி தயார் ஒSubbulakshmi -
கூட்டாஞ்சோறு (Koottaansoru recipe in tamil)
அரிசி ஒரு உழக்கு துவரம்பருப்பு 50கிராம் அரை வேக்காடு வெந்தபின் எல்லா க்காய்கள் பொடியாக வெட்டி சாம்பார் பொடி உப்பு போட்டுவெந்ததும் அரைத்த தேங்காய் ,சீரகம் ,பூண்டு, வெங்காயம், வ.மிளகாய் ,அரைத்தகலவை போட்டு விட்டு கிண்டி வெங்காயம் ,வெந்தயம், கடுகு, உளுந்து ,பெருங்காயம்,கறிவேப்பிலை இரண்டு வரமிளகாய் போட்டு வதக்கவும். பின் சாதத்தில் கலந்து சிறிது நேரம் கழித்து இறக்கவும். ஒSubbulakshmi -
ரசம்...முடக்கத்தான் ரசம் (Mudakkaththaan rasam recipe in tamil)
முடக்கத்தான் கீரை ஒரு கைப்பிடி,மிளகு சீரகம் ,மல்லி மூன்றும் ப.மிளகாய் வரமிளகாய் பூண்டு பெருங்காயம் தக்காளி ஒ2 மிக்ஸியில் அடிக்கவும்.பின் நெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து பின் மிக்ஸியில் அடித்த கலவை விட்டு வதக்கவும். புளித்தண்ணீர், பருப்பு த்தண்ணீர் விட்டு நுரை கட்டி வரும போது உப்பு மல்லி இலை போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
அரிசி கொளுக்கட்டை (Arisi kolukattai recipe in tamil)
அரிசி ஒரு உழக்கு கடலை பருப்பு 50கிராம் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறப்போட்டு ரவை பக்குவத்தில் உப்பு போட்டு அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, வரமிளகாய் 4கறிவேப்பிலை ,பெருங்காயம் தாளித்து மாவை கெட்டியாக கிண்டி தேங்காய் பூஅரைமூடி போட்டு பிசைந்து கொளுக்கட்டைப் பிடித்து ஆவியில் வேகவிடவும். ஒSubbulakshmi -
கத்தரிக்காய் கிரேவி (Kathirikkai gravyrecipe in tamil)
கத்தரி தக்காளி புளித்தண்ணீர் மிளகாய் பொடி மஞ்சள் தூள் சாம்பார் பொடி உப்பு சிறிது போட்டு வேகவிடவும். கடையவும் .வெங்காயம் பூண்டு இஞ்சி கறிவேப்பிலை வெந்தயம் பெருங்காயம் தாளித்து மல்லி இலை கலந்து இதில் போட்டு கொதிக்க விடவும் ஒSubbulakshmi -
குழந்தை சத்து தோசை.முடக்கத்தான் எலும்பு பலம் தோசை (Mudakkathan dosai recipe in tamil)
200அரிசி50பாசிப்பருப்பு ஊறப்போட்டு மிளகாய் வற்றல், இஞ்சி பெருங்காயம், உப்பு முடக்கத்தான் கீரை போட்டு அரைத்து தோசை சுடவும் ஒSubbulakshmi -
அவரைக்காய் துவரம்பருப்பு கலந்த கூட்டு (Avaraikaai thuvaramparuppu kootu recipe in tamil)
துவரம்பருப்பு 100கிராம்,அவரக்காய் 100பொடியாக வெட்டியது, பூண்டு,5,வேகவைத்துவெங்காயம் பெரியது 1வெட்டியது, கடுகு,உளுந்து, கறிவேப்பிலை தாளித்து உப்பு தேவையான அளவு போட்டு கலக்கவும். பருப்பு ஸ்பெஷல் ஒSubbulakshmi -
அடை,அவியல்
அரிசி 2உழக்கு ,பருப்புகள்,கடலைப்பருப்பு, து.பருப்பு,பாசிப்பருப்பு கலந்து ஒரு உழக்கு, கலந்து தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்.பின் தண்ணீர் வடிகட்டி இஞ்சி, பெருங்காயம், பச்சை மிளகாய்5,வரமிளகாய் 7,பெருங்காயம் சிறிது தேவையான அளவு உப்பு ,சீரகம் ,சோம்பு ஒரு ஸ்பூன்போட்டு ரவை பதத்தில் அரைக்கவும். தேங்காய் போடலாம். சின்னவெங்காயம், பெரியவெங்காயம்,முருங்கை கீரை,கறிவேப்பிலை, கடுகு,உளுந்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சுடவும். காய்கள் எல்லாம் உப்பு போட்டு வேகவைத்து தேங்காய், சீரகம், பூண்டு, வெங்காயம் ,ப.மிளகாய் ,அரைத்து கலந்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, கறிவேப்பிலை ,பெரியவெங்காயம் ,வெட்டி தாளித்து தயிர் கலந்து இதில் சேர்க்க அருமையான அடை அவியல் தயார் ஒSubbulakshmi -
அரைத்து விட்ட முருங்கை புளிக்குழம்பு
உளுந்து, மிளகுத்தூள், க.பருப்பு, து.பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, சீரகம், சிறிதளவு,மிளகாய் வற்றல் 4 , வெந்தயம்நன்றாக எண்ணெய் விட்டு வறுத்து நைசா மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம்,கறிவேப்பிலை வறுத்து வெட்டியமுருங்கைக்காய்,5பூண்டு ப்பல்,5சிறிய வெங்காயம் வதக்கவும். ஒரு பெரிய நெல்லி அளவு புளி அரிசி கழுவிய தண்ணீரில் போட்டு புளித்தண்ணீர் ஊற்றி அரைத்த கலவையை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.குழம்பு வற்றவும் இறக்கவும். ஒSubbulakshmi -
இட்லி, தண்ணீர் சட்னி
அரிசி உளுந்து தனித்தனியாக ஊறப்போடவும். அரைக்கவும். கல் சத்தம் வந்து விட்டால் உளுந்து அரைத்தது போதும்.அரிசி வெள்ளை ரவை பக்குவத்தில் அரைக்கவும். இரண்டையும் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து பிசைய.மறு நாள் இட்லி ஊற்ற .குறைந்தது 12மணிநேரம்.தேங்காய், ப.மிளகாய் பொட்டுக்கடலை உப்பு, புளி உறப்பினர்களுக்கு ஏற்ப எடுத்து சட்னி அரைக்கவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம், வெஙகாயம் வறுத்து சட்னியில் கலக்கவும். தண்ணீர் ஊற்றி கலக்கவும் ஒSubbulakshmi -
பாசிப்பருப்பு சாம்பார். பாசிப்பருப்பு பொங்கல் (Paasiparuppu pongal & sambar recipe in tamil)
பாசிப்பருப்பு 100காய்கள் தக்காளி சாம்பார் பொடி உப்பு சேர்த்து 150மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைத்து பின் கடுகு ,உளுந்து,பெருங்காயம் வெந்தயம் வ.மிளகாய் இரண்டு எண்ணெயில் வறுத்து கலக்கவும். மல்லி இலை போடவும். பச்சரிசி 100பருப்பு 50போட்டு தண்ணீர்500மி.லி ஊற்றி உப்பு போட்டு நன்றாக வேக வைத்து பின் 50 டால்டா ஊற்றி மிளகு சீரகம் ப.மிளகாய், இஞ்சி,முந்திரி வறுத்துகலக்கவும். நெய் மீண்டும் ஊற்றி கலக்கவும் ஒSubbulakshmi -
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
50 கடலைப்பருப்பு,50துவரம்பருப்பு ,ஒரு ஸ்பூன் பச்சரிசி,ஊறப்போட்டு வ.மிளகாய் சோம்பு, சீரகம் 1ஸ்பூன், உப்பு போட்டு அரைத்து வெங்காயம் கறிவேப்பிலை,தேங்காய் ,சீரகம், வரமிளகாய், மபூண்டு அரைத்தவிழுதைப் போட்டு உருண்டை ப் பிடிக்கவும். பெரியநெல்லிக்காய் அளவு புளி ஊறப்போட்டு தண்ணீர் ஊற்றிஷகரைத்துக்கொள்ளவும்.கடாயில் வெந்தயம் சோம்பு, சீரகம், கடுகு ,உளுந்து பெருங்காயம் கறிவேப்பிலை வறுத்து புளித்தண்ணீர் ஊற்றி கொதிக்க வும் உருண்டை களைப்போடவும்.வெந்ததும் தேங்காய் விழுது இதில்மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
பயணம் ஸ்பெசல் புளியோதரை(puliyotharai recipe in tamil)
கடலைப்பருப்பு, மிளகு,மல்லி, உளுந்து,எள், வரமிளகாய் ,வெந்தயம்,எண்ணெய் விட்டு வறுத்து தூள் செய்யவும்.புளி நெல்லிக்காய் அளவு தண்ணீரில் ஊறவைத்து கரைத்து நல்லெண்ணெய் வரமிளகாய் ,வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.நிலக்கடலை வறுத்து கலக்கவும். ஒSubbulakshmi -
நவராத்திரி பிரசாதம் பாசிப்பயறு சுண்டல் (Paasi payaru sundal recipe in atmil)
100 கிராம்பாசிப்பயறு 4மணிநேரம் ஊறவைத்து பின் குக்கரில் 200 மி.லி தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் சத்தம் போடவும் இறக்கவும். கடுகு உளுந்து கறிவேப்பிலை பெருங்காயம் தாளித்து போடவும். தேவை என்றால் தேங்காய் பூ போடவும். ஒSubbulakshmi -
ஏகாதேசி ஸ்பெஷல் குழம்பு
எல்லா க்காய்கள் 17காய்கள்,வெங்காயம், தக்காளி ,ப.மிளகாய் வெட்டி நன்றாக சாம்பார் பொடி உப்பு போட்டு வதக்கவும். பயறுவகைகள் 5 ஊறப்போட்டு ,இதனுடன் து.பருப்புவேகவைக்கவும்.து.பருப்பு வேகவைக்கவும்.மிளகு,சீரகம், துபருப்பு, வெந்தயம்க.பருப்பு,உளுந்து,அரைஸ்பூன் கறிவேப்பிலை வெங்காயம் எல்லாம் வறுத்து அரைக்கவும். புளி தண்ணீர் கொஞ்சம் ஊற்றவும்.தேவையான உப்பு போட்டு மல்லி இலை போட்டு எல்லாம் கலந்து கொதிக்க விடவும். ஒSubbulakshmi -
மசாலா சுயம் (Masala suiyyam recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து பைசா உப்பு போட்டு அரைக்கவும். ப.மிளகாய், வெங்காயம், மிளகு,சீரகம் பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு உருண்டை யாக உருட்டி சுடவும். ஒSubbulakshmi -
வெண்டை புளிக்குழம்பு (Vendai pulikulambu recipe in tamil)
பெரியநெல்லிக்காய் அளவு புளி எடுத்து தண்ணீரில் கரைத்து கெட்டியாக கரைசல் எடுத்து வெண்டை ,வெங்காயம், பூண்டு சிறியதாக வெட்டி கடுகு ,உளுந்து, வெந்தயம் தாளித்து மிளகாய் பொடி 3ஸ்பூன் உப்பு போட்டு வதக்கவும்அனைத்தையும் கொதிக்கவிடவும். ஒSubbulakshmi -
வாழைக்காய் உசிலி
வாழைக்காய் வட்மாக வெட்டி அரைவேக்காடு வேக வைத்து கடுகு உளுந்து வறுத்துகடலைப்பருப்பு வெங்காயம் பூண்டு சீரகம் அரைத்த கலவை போட்டுஉப்பு போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
இட்லிப்பொடி (Idlipodi recipe in tamil)
எள்,உளுந்து, க.பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் ,கறிவேப்பிலை சமமாக ,எள்எடுத்து எண்ணெய் விட்டு வறுத்து உப்பு பெருங்காயம் தேவையான அளவு போட்டு திரிக்கவும் ஒSubbulakshmi
கமெண்ட்