கோதுமை கோபி பரோட்டா (Wheat gobi paratha) (Kothumai gobi paratha recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

கோதுமை, காலிஃபிளவர் பரோட்டா குஜராத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. மிகவும் சுவையான இந்த பரோட்டாவை அனைவரும் சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.
#Flour1

கோதுமை கோபி பரோட்டா (Wheat gobi paratha) (Kothumai gobi paratha recipe in tamil)

கோதுமை, காலிஃபிளவர் பரோட்டா குஜராத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. மிகவும் சுவையான இந்த பரோட்டாவை அனைவரும் சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.
#Flour1

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
  1. 1 கப் கோதுமை மாவு
  2. 1 கப்காலிஃளவர் துருவல்
  3. 2பச்சை மிளகாய்
  4. 1 வெங்காயம்
  5. மல்லி இலை
  6. உப்பு தேவையான அளவு
  7. 1 டேபிள் ஸ்பூன் நெய்
  8. 1 டேபிள் ஸ்பூன்எண்ணை
  9. 1 டீஸ்பூன் சீரகம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பௌலில் கோதுமை மாவு, உப்பு, எண்ணை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    காலிஃளவரை நன்கு கழுவி, துருவி, சூடான நீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் வைத்து விட்டு, வடித்து விடவும்.

  3. 3

    வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

  4. 4

    கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் சீரகம், நறுக்கிய வெங்காயம், மிளகாய், மல்லி சேர்த்து வதக்கி, பின் துருவிய காலிஃளவர், சேர்த்து நன்கு வதக்கி உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.

  5. 5

    அந்த சமயம் சப்பாத்தி தேய்க்கும் கல்லில், மாவை வைத்து சப்பாத்தி போல் ரோல் செய்யவும்.

  6. 6

    பின் அதில் தயாராக உள்ள கோபி மசாலாவை வைத்து மூடி பரோட்டா தேய்க்கவும்.

  7. 7

    பின் தேய்த்த பரோட்டாவை தோசை தவாவை சூடு செய்து அதன்மேல் போட்டு, வெந்ததும் திருப்பி போட்டு மிதமான சூட்டில் வைத்து வெந்ததும், நெய் தடவி இறக்கினால் கோதுமை கோபி பரோட்டா சுவைக்க தயார்.

  8. 8

    இந்த சுவையான பரோட்டாவுக்கு சைடு டிஷ் பூண்டு ஊறுகாய் மிகவும் சுவையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes